மேலும் அறிய

Thangam Thennarasu: ”ஏன் மோடி அரசின் கடனைப் பற்றி வாய் திறக்கவில்லை?" எடப்பாடி பழனிசாமிக்கு தங்கம் தென்னரசு பதிலடி!

தி.மு.க. அரசின் கடனைப் பற்றி கவலைப்படும் பழனிசாமி ஏன் மோடி அரசின் கடனைப் பற்றி வாய் திறக்கவில்லை? என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாடு அரசின் 2024-25 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். இந்த நிலையில், தாக்கலான பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்த நிலையில், அதற்கு பதிலடி கொடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார் தங்கம் தென்னரசு.

”கடன் சுமை ஏறிக்கொண்டே அதிமுகவின் சாதனை”

அதில், ”திராவிட இயக்கக் கோட்பாடுகளைக் கொண்ட எல்லோருக்கும் எல்லாமுமான. கடைக்கோடி மனிதருக்கும் நலவாழ்வு அளிக்கும் பட்ஜெட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு தாக்கல் செய்திருக்கிறது. இதனால், கொதிநிலைக்குப் போயிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, "கனவு பட்ஜெட்: மக்களுக்குப் பயன் தராது எனப் புலம்பியிருக்கிறார். தி.மு.க. அரசுக்கு 8,33,361 கோடி கடன் உள்ளது. கடன் பெற்றே ஆட்சியை நடத்துகின்றனர். இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் நம்பர் ஒன் அரசாகத் தமிழ்நாடு அரசு உள்ளது” எனச் சொல்லியிருக்கிறார்.

எம்.ஜி.ஆர். மாளிகையின் பரணில் தூக்கிப் போடப்பட்டிருக்கும் அ.தி.மு.க.வின் 2011 சட்டமன்றத் தேர்தல் அறிக்கையைத் தேடி எடுத்துப் படித்துப் பாருங்கள். அதையெல்லாம் படிக்க உங்களுக்கு நேரம் இருக்காது என்பது எங்களுக்குத் தெரியும். அதனால், 8-ஆம் பக்கத்தை மட்டுமாவது கொஞ்சம் புரட்டிப் பாருங்கள்.

அ.தி.மு.க.தான் தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது. ஜெயலலிதா, பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோரின் பத்தாண்டு ஆட்சிகளில் கடன் சுமை என்கிற தலைக்குனிவைப் போக்குவரத்துப் பதிலாக ஒவ்வொரு தமிழரின் தலையிலும் கடனை ஏற்றியதுதான் உங்கள் சாதனை. 2011 2012-ஆம் ஆண்டில் 1 லட்சத்து 30 ஆயிரத்து 630 கோடி ரூபாயாக இருந்த கடனைப் படிப்படியாக உயர்த்தி 2020 - 2021-ஆம் ஆண்டில் 4 லட்சத்து 85 ஆயிரத்து 502 கோடி ரூபாயாகக் கொண்டு வந்து நிறுத்தினீர்கள்.

'கடன்' என்ற சொல்லுக்குக் 'கடமை' என்ற பொருளும் உண்டு. ஆனால், கடமையைச் செய்யத் தவறிக் கடன் சுமை தொடர்ந்து ஏறிக்கொண்டே போனதுதான் பத்தாண்டு அதி.மு.க. அரசின் சாதனை. 'ஒரு மாநில அரசு. மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் ஆண்டுக்கு மூன்று விழுக்காட்டுக்கு மேல் கடன் வாங்க முடியாது.

”ஏன் மோடி அரசின் கடனைப் பற்றி வாய் திறக்கவில்லை?"

'வருஷா வருஷம் கடன் வாங்கித்தான் இந்த அரசு வண்டியை ஓட்டிக்கிட்டு இருக்கு' என்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அவர்கள். பத்தாண்டு அ.தி.மு.க. அரசும் அதைத்தானே செய்து கொண்டிருந்தது. தி.மு.க. அரசின் கடனைப் பற்றிக் கவலைப்படும் பழனிசாமி ஏன் மோடி அரசின் கடனைப் பற்றி வாய் திறக்கவில்லை?

2014-இல் டாக்டர் மன்மோகன் சிங்கின் ஆட்சியில் 54 லட்சம் கோடியாக இருந்த கடன் பத்தாண்டில் 205 லட்சம் கோடிக்கு மேல் உயர்ந்திருக்கிறதே அதைப் பேசப் பழனிசாமி வாய்க்கு யார் பூட்டு போட்டார்கள்?  பா.ஜ.க.வோடு கூட்டணி இல்லை என்பதை மணிக்கொரு முறை சொல்லிக் கொண்டிருக்கும் பழனிசாமி, அது உண்மையென்றால் ஒன்றிய அரசின் கடனைப் பற்றி கர்ஜிக்க வேண்டியதுதானே?

பழனிசாமி அவர்கள் அளித்த அந்தப் பேட்டியில் அவரே ஒரு உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார். "அ.தி.மு.க. ஆட்சியை விட அதிக வருவாய் இப்போது தி.மு.க. ஆட்சியில் வருகிறது" எனச் சொல்லியிருக்கிறார். அதாவது வருவாயைப் பெருக்கும் பணியைத் தி.மு.க. அரசு செவ்வனே செய்து வருகிறது என அவரே சர்டிபிகேட் கொடுத்திருக்கிறார்.

கடனை அடைக்க வருவாயைப் பெருக்கும் வழியையும் மு.க.ஸ்டாலின் அரசு செய்து கொண்டிருக்கிறது. நிச்சயமாகக் கடனை அடைக்கும் வழிகளை இன்னும் சிறப்பாக இந்த அரசு மேற்கொள்ளும். 'தி.மு.க. அரசின் பட்ஜெட் கானல் நீர் போன்றது; மக்களுக்குப் பயன் தராது' எனச் சொல்லியிருக்கிறார். அது பயன் தரும் என நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பு எழுதுவார்கள். கடந்த காலங்களில் அதி.மு.க.வின் பட்ஜெட்டுகளில் வெளியான அறிவிப்புகள் புஸ்வாணமானதை எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி மறந்துவிட வேண்டாம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi: தொடங்கியது மக்களவை முதல் கூட்டத்தொடர்.. எம்.பி.யாக பதவியேற்றார் பிரதமர் மோடி..!
தொடங்கியது மக்களவை முதல் கூட்டத்தொடர்.. எம்.பி.யாக பதவியேற்றார் பிரதமர் மோடி..!
AIADMK: கள்ளக்குறிச்சி சம்பவம் திமுக அரசின் அலட்சியம்.. கண்டன ஆர்ப்பாட்டத்தில் இபிஎஸ் குற்றச்சாட்டு
கள்ளக்குறிச்சி சம்பவம் திமுக அரசின் அலட்சியம்.. கண்டன ஆர்ப்பாட்டத்தில் இபிஎஸ் குற்றச்சாட்டு
Breaking News LIVE: 140 கோடி மக்களின் கனவை நனவாக்க எம்பிக்கள் பாடுபட வேண்டும் - பிரதமர் மோடி
Breaking News LIVE: 140 கோடி மக்களின் கனவை நனவாக்க எம்பிக்கள் பாடுபட வேண்டும் - பிரதமர் மோடி
Trichy Surya Siva: பாஜக வேண்டாம், வேண்டவே வேண்டாம்.. சந்தானம் காமெடியை பகிர்ந்த சூர்யா சிவா
பாஜக வேண்டாம், வேண்டவே வேண்டாம்.. சந்தானம் காமெடியை பகிர்ந்த சூர்யா சிவா
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: தொடங்கியது மக்களவை முதல் கூட்டத்தொடர்.. எம்.பி.யாக பதவியேற்றார் பிரதமர் மோடி..!
தொடங்கியது மக்களவை முதல் கூட்டத்தொடர்.. எம்.பி.யாக பதவியேற்றார் பிரதமர் மோடி..!
AIADMK: கள்ளக்குறிச்சி சம்பவம் திமுக அரசின் அலட்சியம்.. கண்டன ஆர்ப்பாட்டத்தில் இபிஎஸ் குற்றச்சாட்டு
கள்ளக்குறிச்சி சம்பவம் திமுக அரசின் அலட்சியம்.. கண்டன ஆர்ப்பாட்டத்தில் இபிஎஸ் குற்றச்சாட்டு
Breaking News LIVE: 140 கோடி மக்களின் கனவை நனவாக்க எம்பிக்கள் பாடுபட வேண்டும் - பிரதமர் மோடி
Breaking News LIVE: 140 கோடி மக்களின் கனவை நனவாக்க எம்பிக்கள் பாடுபட வேண்டும் - பிரதமர் மோடி
Trichy Surya Siva: பாஜக வேண்டாம், வேண்டவே வேண்டாம்.. சந்தானம் காமெடியை பகிர்ந்த சூர்யா சிவா
பாஜக வேண்டாம், வேண்டவே வேண்டாம்.. சந்தானம் காமெடியை பகிர்ந்த சூர்யா சிவா
கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் ; வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை
கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் ; வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை
Salem Leopard: சேலத்தில் உலா வரும் சிறுத்தை - தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் வனத்துறை..
சேலத்தில் உலா வரும் சிறுத்தை - தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் வனத்துறை..
Lionel Messi Birthday: உயரமே கால்பந்துக்கு தடை... பயிற்சியாளரிடம் கெஞ்சிய பாட்டி.. மெஸ்ஸி சந்தித்த அவமானமும்.. வெகுமானமும்!
உயரமே கால்பந்துக்கு தடை... பயிற்சியாளரிடம் கெஞ்சிய பாட்டி.. மெஸ்ஸி சந்தித்த அவமானமும்.. வெகுமானமும்!
TN Assembly Session LIVE: வன்னியர் இடஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்..!
TN Assembly Session LIVE: வன்னியர் இடஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்..!
Embed widget