TN Weather: 5 நாட்களுக்கு எச்சரிக்கை! இந்த பகுதிகளில் வெயில் கொளுத்தப்போது...வானிலை அப்டேட்
Tamilnadu Weather Updates: இன்று முதல் மார்ச் 20ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Tamilnadu Weather Updates: கடந்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பதிவாகியுள்ளது. வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.
தமிழ்நாட்டின் வானிலை:
தமிழ்நாட்டின் மேல் பகுதியில் ஒரு வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்நிலையில் இன்று தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும், நாளை முதல் மார்ச் 22 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மழையை பொறுத்தவரை திற்பரப்பு (கன்னியாகுமரி) 3 செ.மீ, சிற்றாறு+ (கன்னியாகுமரி), பேச்சிப்பாறை AWS (கன்னியாகுமரி) தலா 1 செ.மீ அளவும் மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பநிலை நிலவரம்:
அதிகபட்ச வெப்பநிலையானது சேலத்தில் 37.2° செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை (சமவெளிப்பகுதிகளில்) கரூர் பரமத்தியில் 20.0° செல்சியஸ் பதிவாகியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றம் ஏதுமில்லை.
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பெரும்பாலான இடங்களில் பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது. ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது.
தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 34 37° செல்சியஸ் மற்றும் தமிழக கடலோரப் பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 31-35 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
அடுத்த 5 தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை
அதிகபட்ச வெப்பநிலை 16-03-2025 முதல் 20-03-2025 வரை: தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.
இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு இன்று முதல் 20-03-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2-3 டிகிரி அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவிட்துள்ளது.
சென்னை வானிலை முன்னறிவிப்பு:
இன்று (16-03-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை (17-03-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியம் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை என வானிலை மையம் தெரிவித்துள்ளது.





















