TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
TN Weather Update: தமிழ்நாட்டில் இன்று இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் , 30 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது,
30 மாவட்டங்களில் மழை:
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, பெரம்பலூர், அரியலூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், நெல்லை, ராமநாதபுரம், குமரி, நீலகிரி, கோவை, ஈரோடு, புதுக்கோட்டை, தஞ்சை, சிவகங்கை, சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட 30 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:
சென்னையில், கடந்த சில நாட்களாகவே, ஈரக் காற்று வீசி வருகிறது. பகலில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஆனால், திடீரென்று இரவு நேரத்தில் 9 மணிக்கு மேல் மழை பரவலாக பெய்து வருகிறது.
அடுத்த 5 நாட்களுக்கு மழை:
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) July 5, 2024
இந்நிலையில், தமிழ்நாட்டில் வானிலை குறித்து வானிலை மையம் தெரிவித்துள்ளதாவது, மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, அடுத்த 5 நாட்களுக்கு , அதாவது ஜூலை 5 ஆம் தேதி முதல் ஜூலை 10 ஆம் தேதி வரை பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரித்து விடுத்துள்ளதாவது, மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகளிலும் , வங்க கடல் மற்றும் வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளிலும் ஜூலை 5 - 7 ஆம் தேதி வரை மணிக்கு சுமார் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.