TN Weather: 2-3 டிகிரி வெயில் அதிகரிக்கும்..வானிலை மையம் எச்சரிக்கை
Temperature: தமிழ்நாட்டில் அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் வானிலை:
இந்நிலையில் 29-04-2025 மற்றும் 30-04-2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
01-05-2025 முதல் 03-05-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
04-05-2025 மற்றும் 05-05-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
29-04-2025 முதல் 02-05-2025 வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3 செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும்.
29-04-2025 முதல் 01-05-2025: அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை வானிலை முன்னறிவிப்பு:
இன்று (29-04-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை ஓட்டியும். குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை (30-04-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸை ஓட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம், புதுவைமற்றும்காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை அறிக்கைhttps://t.co/467dVuULiL pic.twitter.com/Fhmd2G2JZ7
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) April 29, 2025
கடந்த 24 மணி நேரத்திற்கான வானிலை தொகுப்பு:
மழை நிலவரம்:
தென்தமிழக கடலோர பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.
பதிவான மழை அளவு (சென்டிமீட்டர்):
ஆவுடையார்கோயில் (புதுக்கோட்டை) 10.
பூதலூர் (தஞ்சாவூர்) 7.
மண்டபம் (ராமநாதபுரம்) 6,
திருவாடானை (ராமநாதபுரம்) 5.
திற்பரப்பு (கன்னியாகுமரி), சிவலோகம்(சிற்றாறு-II) (கன்னியாகுமரி), சுருளக்கோடு (கன்னியாகுமரி), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி). புத்தன் அணை (கன்னியாகுமரி). சோலையார் (கோயம்புத்தூர்), மஞ்சளாறு (தேனி) தலா 4, பாம்பன் (ராமநாதபுரம்), கே.எம்.கோயில் (கடலூர்), பேச்சிப்பாறை AWS (கன்னியாகுமரி), தங்கச்சிமடம் (ராமநாதபுரம்), கழுகுமலை (தூத்துக்குடி), திருமானூர் (அரியலூர்), லால்பேட்டை (கடலூர்) தலா 3, மதுக்கூர் (தஞ்சாவூர்), களியல் (கன்னியாகுமரி), ஆனைமலை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்). அதிராமப்பட்டினம் (தஞ்சாவூர்), பெரியாறு (தேனி), மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி). சிற்றாறு-I (கன்னியாகுமரி), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி) தலா 2, அணைகெடங்கு (கன்னியாகுமரி), ஆரல்வாய்மொழி (கன்னியாகுமரி), மயிலாடுதுறை (மயிலாடுதுறை), கேத்தி (நீலகிரி), எஸ்டேட் (நீலகிரி) முக்கடல் அணை (கன்னியாகுமரி), செருமுள்ளி (நீலகிரி), தொண்டி (ராமநாதபுரம்), மணல்மேடு ARG (மயிலாடுதுறை), மணல்மேடு (மயிலாடுதுறை), கன்னிமார் (கன்னியாகுமரி) தலா 1 செ.மீ மழை பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வெப்பநிலை நிலவரத்தை பொறுத்தவரையில், அதிகபட்ச வெப்பநிலை கரூர் பரமத்தி: 39.0° செல்சியஸ் பதிவாகியதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.




















