Tamilnadu Rain: ஜூலை 15, 16, தினங்களில் இந்த மாவட்டங்களில் கனமழைதான்! முன்னெச்சரிக்கை மக்களே!
TN Rain: வரும் ஜூலை 15, 16, தினங்களில் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வரும் நாட்களில் வானிலை எவ்வாறு இருக்கும் , எங்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது குறித்து வானிலை மையம் என்ன தெரிவித்துள்ளது என்பது குறித்து காண்போம்.
இன்று இரவு 10 மணிவரை:
இன்று இரவு 10 மணிக்குள் , வேலூர், ராணிப்பேட்டை, கடலூர், தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, கோவை மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வானிலை குறித்து, வானிலை மையம் விரிவாக தெரிவித்திருப்பதாவது, மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது.
மேலும் ஜூலை 14 ஆம் தேதியான நாளை, தமிழ்நாட்டில் உள்ள ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கனமழை எச்சரிக்கை:
இதையடுத்து, ஜூலை 15 ஆம் தேதி, 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஆகையால், நீலகிரி, கோவை, ஈரோடு, தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் ஆகிய 7 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் மிக முன்னெச்சரிக்கையாக இருக்குமாரு வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அடுத்ததாக ஜூலை 16 ஆம் தேதி, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் ஈரோடு ஆகிய 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:
சென்னையை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் , ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கையில், அடுத்த 5 தினங்களுக்கு வங்க கடலில் காற்றின் வேகமானது அதிகமாக இருக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.