TN Headlines: எ.வ.வேலு வீட்டில் 4வது நாளாக ரெய்டு...3 நாட்களுக்கு கனமழை தொடரும் - முக்கிய செய்திகள்
தமிழ்நாட்டில் இதுவரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை கீழே நாம் காணலாம்.
- IT Raid: அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் 4 வது நாளாக தொடரும் வருமான வரி சோதனை
இரண்டாவது நாளாக அமைச்சர் எ.வவேலுக்கு சொந்தமான அருணை கட்டுமான நிறுவனத்தை அருணை வெங்கட் என்பவர் நடத்தி வருகிறார். இவர் திருவண்ணாமலை உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள தார் சாலை காண்டாக்ட், கட்டுமான பணிகள், கால்வாய் போன்றவைகள் மற்றும் நெடுஞ்சாலை துறையின் பணிகளை எடுத்து செய்து வருகிறார். மேலும் திருவண்ணாமலை நகரத்தில் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு நெருக்கமானவர்களின் இல்லங்கள் மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடைப்பெற்று வருவகின்றனர். மேலும் படிக்க
- Minister Ponmudi: சொத்துக்குவிப்பு வழக்கு மீண்டும் விசாரணை.. தடை கேட்ட அமைச்சர் பொன்முடிக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்..!
அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்க தடையில்லை என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக, தற்போதைய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பதவி வகித்தார். அப்போது வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.36 கோடி சொத்து சேர்த்ததாக பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீது லஞ்ச ஒழிப்புத்துறை 2002 ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது. மேலும் படிக்க
- Madras High Court: அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? - காவல்துறையை சாடிய சென்னை உயர்நீதிமன்றம்!
சனாதான ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர் பாபு ஆகியோர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து இருந்திருக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு சனாதன தர்மத்திற்கு எதிராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பி இருந்தது. அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆகியோருக்கு எதிராக கோவாரண்டோ வழக்கும் நிலுவையில் உள்ளது. மேலும் படிக்க
- TN Rain Alert: மூன்று நாட்களுக்கு கனமழை தொடரும்.. சென்னையில் நிலவரம் எப்படி? மழை அப்டேட் இதோ..
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், திருப்பூர், கரூர், தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. மேலும் படிக்க
- CM Stalin Sri Lanka: இலங்கையில் ஒளிபரப்பாகாத முதலமைச்சர் ஸ்டாலினின் காணொலி உரை..! மத்திய அரசு செய்தது என்ன?
இந்திய வம்சாவளியினர் தென்னிந்தியாவிலிருந்து, குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்து இலங்கையில் குடியேறி 200 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதனை நினைவு கூறும் வகையில், இலங்கையின் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வளர்ச்சி அமைச்சர் ஜீவன் தொண்டமான் 'நாம் 200' என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார். இதில் இந்தியாவின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமை விருந்தினராக பங்கேற்றார். மேலும் படிக்க