மேலும் அறிய

CM Stalin Sri Lanka: இலங்கையில் ஒளிபரப்பாகாத முதலமைச்சர் ஸ்டாலினின் காணொலி உரை..! மத்திய அரசு செய்தது என்ன?

CM Stalin: இலங்கையில் நடைபெற்ற ”நாம் 200” நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலினின் காணொலி உரை, ஒளிபரப்பாகாதது ஏன் என்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

CM Stalin: இலங்கையில் நடைபெற்ற ”நாம் 200” நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலினின் காணொலி உரை,  ஒளிபரப்பப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

”நாம் 200 நிகழ்ச்சி”

இந்திய வம்சாவளியினர் தென்னிந்தியாவிலிருந்து, குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்து இலங்கையில் குடியேறி 200 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதனை நினைவு கூறும் வகையில், இலங்கையின் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வளர்ச்சி அமைச்சர் ஜீவன் தொண்டமான் 'நாம் 200' என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார். இதில் இந்தியாவின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமை விருந்தினராக பங்கேற்றார். 

ஒளிபரப்பாகாத முதலமைச்சர் ஸ்டாலினின் உரை:

இந்த நிகழ்ச்சியில் ஒளிபரப்பு செய்வதற்கான தனது உரையை முதலமைச்சர் ஸ்டாலின் காணொலியாக பதிவு செய்து அனுப்பினார். ஆனால், நிகழ்ச்சியில் அந்த உரை ஒளிபரப்பப்படவில்லை. தமிழர்கள் தொடர்பான நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சரின் காணொலியே இடம்பெறாததற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். ”ஸ்டாலினின் உரையை ஒளிபரப்ப தடை விதித்ததன் மூலம் அவரை சிறுமைப்படுத்துவதற்கு முயன்றுள்ள ஒன்றிய பாஜக அரசின் செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது” என மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நடந்தது என்ன?

இதுதொடர்பாக வெளியாகியுள்ள தகவலின்படி, “நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமை விருந்தினராக பங்கேற்ற நிலையில், மத்திய அரசு தான் நிகழ்ச்சி நிரலை இறுதி செய்ய வேண்டும். தமிழக முதலமைச்சரின் காணொலி பதிவு நிகழ்ச்சிக்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பு தான் வந்து சேர்ந்ததால், அதனை ஒளிபரப்புவதற்கான ஒப்புதல் பெற முடியவில்லை” என கூறப்படுகிறது. அதேநேரம், ஸ்டாலினின் காணொலி உரை உள்ளூர் ஊடகங்களுக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆட்சேபனை தெரிவித்த மத்திய அரசு?

மற்றொரு தகவலின்படி, காணொலி உரையை வழங்குமாறு நிகழ்ச்சி நடைபெறும் நாளன்று முதலமைச்சர் ஸ்டாலினிடம், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதனடிப்படையில் முதலமைச்சரும் காணொலியை வழங்கியுள்ளார். ஆனால், இந்த வீடியோ நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகாதது தொடர்பாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இதுவரை விளக்கமளிக்கவில்லை. அதேநேரம் கொழும்புவை தளமாகக் கொண்ட தி மார்னிங் நாளிதழ் ஞாயிறன்று வெளியிட்ட செய்தியில், ”முதலமைச்சர் ஸ்டாலினின் உரையை கடைசி நிமிடத்தில் சேர்ப்பதற்கு இந்திய அரசாங்கம் ஆட்சேபனைகளை தெரிவித்தது. நிகழ்வின் திருத்தப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு இந்திய அரசு ஒப்புதல் அளிக்காததால், உள்ளூர் அமைப்பாளர்களால் ஸ்டாலினின் உரையை ஒளிபரப்ப முடியவில்லை” என குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக அமைச்சருக்கு தாமதமான அனுமதி:

முன்னதாக இந்த நிகழ்ச்சியில் தமிழக அரசு சார்பில் பங்கேற்க நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அழைக்கப்பட்டதாகவும், அவரது பயணத்திற்கு முதலமைச்சர் ஒப்புதல் அளித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேநேரம், ”திட்டமிடப்பட்ட நிகழ்வுக்கு முந்தைய நாள் வரை அவரது பயணத்திற்கு மத்திய அரசிடம் இருந்து அனுமதி வரவில்லை. மறுநாள் காலை நிகழ்ச்சி தொடங்கவிருந்த நேரத்தில் தங்கம் தென்னரசுவிற்கு அனுமதி கிடைத்துள்ளது. இதனிடையே இனியும் அனுமதி வழங்கப்பட வாய்ப்பில்லை என்று தோன்றியதால் அமைச்சர் தனது விமான டிக்கெட்டை ரத்து விட்டதாக” தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை அமைச்சர் விளக்கம்:

இதுதொடர்பாக பேசியுள்ள இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டைமான், “மாலை 4 மணியளவில் நிகழ்ச்சி தொடங்க திட்டமிடப்பட்டு இருந்தது. தமிழக அரசு சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு வரவேண்டி இருந்தது. ஆனால், அவரால் வர இயலவில்லை. எனவே நண்பகல் 12 மணியளவில் முதலமைச்சர் ஸ்டாலினை தொடர்புகொண்டு, காணொலி உரை ஒன்றை வழங்க வேண்டும் என கேட்டோம். அவரும் தனது உரையை வழங்கினார், மக்களிடமும் கொண்டு போய் சேர்த்தோம். ஆனால், அந்த உரை சுமார் 2.30 முதல் 3 மணியளவில் தான் கிடைத்தது. இதனால் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அதனை நிகழ்ச்சி நிரலில் சேர்ப்பதில் தொழுல்நுட்ப சிக்கல் ஏற்பட்டது. அதைதவிர இதில் வேறு எந்த பிரச்னையும் இல்லை” என கூறியுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் -  திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் - திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் -  திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் - திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Embed widget