(Source: ECI/ABP News/ABP Majha)
Rain Holiday: நாளை எந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை தெரியுமா? முழு விவரம்.!
Rain Holiday Oct 16: கனமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை எதிரொலியாக, தமிழ்நாட்டில், நாளை பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், எந்தெந்த மாவட்டங்கள் என தெரிந்து கொள்ளுங்கள்.
பள்ளிகள் - கல்லூரிகள் :
நாளை (16.10.2024 அன்று) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் மட்டும்:
சேலம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
எந்தெந்த மாவட்டங்களில் நாளை (அக்.16) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?https://t.co/wupaoCz9iu | #TNRains #ChennaiRains #ChennaiRainsUpdate #TamilnaduNews #Weatherupdate #ABPNadu pic.twitter.com/q0J3isGHw6
— ABP Nadu (@abpnadu) October 15, 2024
அரசு அலுவலகங்கள்:
இந்த நிலையில் நாளை (16.10.2024 ) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களிலுள்ள அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
தனியார் நிறுவனங்கள்:
நாளை (16.10.2024) மிக அதி கனமழை எதிர்பார்க்கப்படுவதை முன்னிட்டு, சென்னையில் உள்ள தனியார் அலுவலகங்கள் மிகக் குறைந்தபட்ச பணியாளர்களைக் கொண்டோ அல்லது தங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்து பணியாற்றும்படியோ அரசு சார்பில் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது
அத்தியாவசிய சேவைகள் இயங்கும்:
இருப்பினும், அத்தியாவசிய சேவை துறைகளான காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, உள்ளாட்சி நிர்வாகத் துறைகள். பால்வளத் துறை, குடிநீர் வழங்கல் துறை. மருத்துவமனைகள், மருந்தகங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள், மின்சாரத் துறை, காய்கறிகள் மற்றும் இதர அத்தியாவசிய பொருட்களுக்கான போக்குவரத்து, மாநகரப் போக்குவரத்து, சென்னை மெட்ரோ ரயில், MRTS, இரயில்வே, விமான நிலையம், விமான போக்குவரத்து, பெட்ரோல் பங்குகள், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் மற்றும் பேரிடர் மீட்பு நிவாரண பணிகள் மேற்கொள்ளும் துறைகள் ஆகியவை வழக்கம் போல் இயங்கும். பிற கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்படும்
காற்றழுத்தம்:
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறுகிறது. இதனால், தமிழ்நாட்டில் வரும் 17ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் 15,16,17 தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த காற்றாழுத்த தாழ்வு மண்டலமானது நாளை மறுநாள் ( அக்.17 ) காலை 5.30 மணியளவில் சென்னை கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.