மேலும் அறிய
Advertisement
Tamilnadu Round Up: 10 மணிக்குள் நடந்த பரபரப்பான சம்பவங்கள்! தமிழ்நாட்டில் இதுவரை..
Tamilnadu Round Up: தமிழ்நாட்டில் காலை முதல் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
- காந்தி பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள கிராம ஊராட்சிகளில் இன்று கிராம சபைக்கூட்டம்
- மாமல்லபுரத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் விதிகளுக்கு புறம்பாக கட்டுமான பணிகள் நடப்பதாக வழக்கு – மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க பசுமை தீர்ப்பாயம் வழக்கு
- சென்னையில் விமான சாகச நிகழ்ச்சி எதிரொலி; 25 விமானங்களின் பயண நேரம் மாற்றம்
- கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு மாநாடு
- விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் தி.மு.க, மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் நிர்வாகிகள் பங்கேற்பு
- வாரத்தில் ஒருநாள் செல்போனுக்கு ஓய்வு கொடுங்கள்; நீதிபதி ஜெகதீஷ் சந்திரா வேண்டுகோள்
- சென்னை சென்ட்ரல் – திருப்பதி உள்ளிட்ட 8 ரயில்களில் கூடுதலாக 2 பெட்டிகள் இணைக்கப்படும் – தெற்கு ரயில்வே அறிவிப்பால் பயணிகள் மகிழ்ச்சி
- தென்காசி மாவட்டம் சங்கரன்கோயில் அருகே தண்டவாளத்தில் கல் வைத்த சம்பவம் – இரண்டு பேரை கைது செய்த காவல்துறை
- நடப்பாண்டில் இயற்கை பேரிடர்களால் மொத்தம் 1400 பேர் உயிரிழப்பு
- தமிழ்நாட்டில் இன்று 7 இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்
- இதயத்தில் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் நாளை அல்லது நாளை மறுநாள் வீடு திரும்ப உள்ளார்
- தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டிற்கான பணிகளை தீவிரப்படுத்திய த.வெ.க. நிர்வாகிகள்
- இன்று மகாளய அமாவாசை; தமிழ்நாட்டின் முக்கிய நீர்நிலைகளில் புனித நீராடிய பக்தர்கள் –முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 8ம் தேதி கூடுகிறது தமிழக அமைச்சரவை – முக்கிய முடிவுகள் எடுக்கத் திட்டம்
- தமிழக காவல்துறையில் சிறப்பாக செயல்பட்ட 5 காவலர்களுக்கு காந்தியடிகள் விருது
- தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை வரும் அக்டோபர் 3வது வாரத்தில் தொடங்க வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
- தமிழ்நாட்டில் நடப்பாண்டில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகம் பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மைய இயக்குனர் தகவல்
- கோவை ஈஷா யோகா மையத்தில் இன்றும் விசாரணை தொடரும் – காவல்துறை அறிவிப்புt
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion