மேலும் அறிய

New Year Rain: இரவு புத்தாண்டு கொண்டாடுவோர் கவனத்திற்கு: இன்று 5 மாவட்டங்களில் மழை இருக்கு.!

New Year 2025 - Rain: இன்று இரவு கன்னியாகுமரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

5 மாவட்டங்கள்:

தமிழ்நாட்டில் உள்ள ராமநாதபுரம், தென்காசி, திருநெல்வேளி, தூத்துக்குடி மற்றும் கன்னியகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் தற்போதைய இரவு முதல் நாளை அதிகாலை 1 மணிவரையில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஆகையால் , இன்று இரவு கொண்டாட்டங்களில் ஈடுபடும் மக்கள், மேலே குறிப்பிடப்பட்டுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள், சற்று  முன்னெச்சரிக்கையாக குடை உள்ளிட்டவைகளுடன் இருப்பது நல்லது. 

2024 ஆண்டில் எங்கு அதிகமழை?:

2024 ஆண்டில் மழையளவானது, ஜனவரி முதல் டிசம்பர் வரை 117.9 செ.மீ மழை பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதில், அதிகபட்சமாக நெல்லை மாவட்டத்தில், இயல்பைவிட 100 சதவிகிதம் அதிகமாக மழை பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், 27 மாவட்டங்களில் இயல்பைவிட அதிகமாகவும், 12  மாவட்டங்களில் இயல்பை ஒட்டியும் மழை பெய்துள்ளதாக வானிலை மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024 ஆண்டில் எந்த மாவட்டத்திலும் இயல்பைவிட குறைவாக மழை பெய்யவில்லை எனவும் வானிலை மையம் சார்பில் தெரிவித்துள்ளது.  

வடகிழக்கு பருவமழை:

வடகிழக்கு பருவமழையானது, அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் வரையிலான கால அளவில் பெய்யும். இந்த ஆண்டில் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் 58.99 செ.மீ மழை பெய்துள்ளது. வடகிழக்கு பருவ மழையானது இந்த கால அளவில் இயல்பைவிட 33 சதவிகிதம் அதிகமாகும். கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையானது 4 சதவிகிதம் அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

மாதங்களாக பார்க்கையில், அக்டோபர் மாதத்தில் இயல்பைவிட 25 சதவிகிதம் அதிகம் எனவும் நவம்பர் மாதத்தில் 23 சதவிகிதம் குறைவு எனவும் மற்றும் டிசம்பர் மாதத்தில் இயல்பைவிட 164 சதவிகிதம் அதிகமாக மழை பெய்து உள்ளதாகவும்  வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

மாவட்டங்களாக பார்க்கையில், இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரை தமிழ்நாட்டின் 6 மாவட்டங்களான நெல்லை, சேலம், திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாக மழைபெய்துள்ளதாக தென் மண்டல வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

தென்மேற்கு பருவமழை

தென்மேற்கு பருவமழையானது இயல்பாக ஜூன் மாதம் முதல் செப்டம்பர் வரையிலான கால அளவில் மழை பெய்யும். தென்மேற்கு பருவமழை காலத்தில் நெல்லை மாவட்டத்தில் இயல்பை விட மிக அதிகமாக மழை இருந்தது. 16 மாவட்டங்களில் இயல்பைவிட அதிகமாகவும் 17 மாவட்டங்களில் இயல்பை ஒட்டியும்  6 மாவட்டங்களில் இயல்பை விட குறைவாகவும் இருந்ததாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Also Read: Space News: 2024 ஆண்டில் டாப் 7 விண்வெளி செய்திகள்: சிக்கிக் கொண்ட சுனிதா வில்லியம்ஸ் முதல் விண்வெளி சுற்றுலா வரை

தலைப்பு செய்திகள்

சென்னை ரயில் பயணிகளுக்கு மெகா ஜாக்பாட்! ரூ.2100 கோடி செலவில் வரப்போகும் 4 மாஸ் மாற்றங்கள்!
Chennai Rail Expansion: சென்னை ரயில் பயணிகளுக்கு மெகா ஜாக்பாட்! ரூ.2100 கோடி செலவில் வரப்போகும் 4 மாஸ் மாற்றங்கள்!
ஆஜராகாத அதிகாரி... கடுப்பான தகவல் ஆணையம்! மனுதாரருக்கு இழப்பீடு கொடுக்க அதிரடி உத்தரவு!
ஆஜராகாத அதிகாரி... கடுப்பான தகவல் ஆணையம்! மனுதாரருக்கு இழப்பீடு கொடுக்க அதிரடி உத்தரவு!
ரூ. 45,000 தள்ளுபடி! சாம்சங் S25 எட்ஜ் வாங்க இதுதான் சரியான நேரம் – ஃபிளிப்கார்ட் மாஸ் ஆபரா?
ரூ. 45,000 தள்ளுபடி! சாம்சங் S25 எட்ஜ் வாங்க இதுதான் சரியான நேரம் – ஃபிளிப்கார்ட் மாஸ் ஆபரா?
டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - காஞ்சிபுரம் ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!
டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - அதிரடி அறிவிப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget