Chennai Rain: சென்னைக்கு 2 நாட்கள் மழை இருக்கு.. 8 மாவட்டங்களில் இப்படியா? விரிவான வானிலை தகவல்..
Tamilnadu Rain Updates August 7: தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களில் உள்ள பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Tamilnadu Weather Updates: சென்னையில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நிலையில், இரண்டு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:
சென்னையில் நேற்று திடீரென இரவு மழை கொட்டியது. ஒரு சில இடங்களில் சாரல் மழையும் சில இடங்களில் கன மழையும் பெய்தது. இதையடுத்து, காலை முதல் வானமானது மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.
இந்நிலையில் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) August 7, 2024
தமிழ்நாடு:
தமிழ்நாட்டின் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு,விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 8 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் நாளை மற்றும் நாளை மறுதினம் தமிழ்நாட்டின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) August 7, 2024
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
நாளை மன்னர் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்றானது மணிக்கு 35 கி.மீ முதல் 45 கி.மீ வரை வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஆகையால், மீனவர்கள் இப்பகுதிக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இரவு 14 மாவட்டங்களில் மழை:
தமிழ்நாட்டில் இன்று இரவு 7 மணிவரை 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், நாமக்கல், சேலம், தருமபுரி, கரூர், கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Also Read: சீலிங்கை பிரித்து கொண்டு ஊற்றும் மழை - குளம் போல மாறிய அரசு மருத்துவமனை - வேதனையில் நோயாளிகள்...!