TN Rain: இரவு 7 மணிவரை 14 மாவட்டங்களில் மழை..! மக்களே முன்னெச்சரிக்கை..!
Tamilnadu Rain Updates Today: தமிழ்நாட்டில் இன்று இரவு 7 மணிவரை 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று இரவு 7 மணி வரை 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஆகையால், இந்த பகுதிகளைச் சேர்ந்த மக்கள் முன்னெச்சரிக்கையாக , உங்களது பணிகளை திட்டமிட்டுக் கொள்ளவும்.
14 மாவட்டங்களில் மழை:
நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 14 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) July 21, 2024
மேலும் வானிலை அறிவிப்பு தொடர்பாக வானிலை மையம் அறிக்கை தெரிவிப்பதாவது, அடுத்த 7 நாட்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள ஒருசில இடங்களில் மிதமானது முதல் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:
சென்னையை பொறுத்தவரை , அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) July 21, 2024