Rain in Tamilnadu: மழை இன்னும் ஓயல... அடுத்த 3 மணிநேரத்திற்கு 14 மாவட்டங்களில் மழை...! எங்கெல்லாம்? முழு விவரம்
அடுத்த 3 மணிநேரத்திற்கு 14 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 3 மணிநேரத்திற்கு 14 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், வேலூர், நாகப்பட்டினம், ராணிபேட், திருப்பத்தூர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விருதுநகர், வேலூர், உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மீனம்பாக்கம் (சென்னை) 40.7, நுங்கம்பாக்கம் (சென்னை) 57.2, காரைக்கால் 7.0, கடலூர் 3.0, புதுச்சேரி 5.0, பரங்கிப்பேட்டை (கடலூர்) 1.0, வேலூர் 15.0, திருத்தணி (திருவள்ளூர்) 6.0 மிமீ மழை பதிவாகியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெப்பநிலை குறைந்துள்ளது. பல பகுதிகளில் வெப்பநிலை இயல்பை விட 2 – 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருந்தது. ஜூன் முதல் வாரத்தில் வெப்பநிலை 42 டிகிரி செல்சியஸ் கடந்து பதிவான நிலையில், தற்போது அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இன்று தமிழ்நாட்டில் வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
21.06.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
22.06.2023 மற்றும் 23.06.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் சென்னையில் வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில் கடந்த 2 நாட்களாக நல்ல மழை பெய்து வருவது மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது. மடிப்பாக்கம், ஆதம்பாக்கம், ஆலந்தூர், கிண்டி, சின்னமலை, வேளச்சேரி, சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, ஆயிரம் விளக்கு, அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. கடலில் இருந்து மேகக்கூட்டங்கள் வருவதை ஒட்டி கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருவதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இந்த மழையானது அடுத்த 2 நாட்களுக்கு தொடரும் என வானிலை மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.