மேலும் அறிய
Advertisement
TN Headlines: மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம்.. தொடரப்போகும் மழை..! தமிழ்நாட்டில் இதுவரை நடந்தது என்ன?
தமிழ்நாட்டில் இதுவரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை கீழே நாம் காணலாம்.
- தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், நாம் உழைப்பது நம் இயக்கத்தின் வெற்றிக்காக மட்டுமல்ல, நாட்டு மக்களின் விடுதலைக்காகவும் தான் என தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். மேலும் படிக்க: CM Stalin: உழைப்பது இயக்கத்தின் வெற்றிக்காக மட்டுமல்ல.. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தொண்டர்களுக்கு முதலமைச்சர் அழைப்பு..
- வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையிலங் தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடர்ந்து பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தெற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் படிக்க: TN Rain Alert: வலுப்பெறும் வடகிழக்கு பருவமழை.. அடுத்த 5 நாட்களுக்கு கொட்டப்போகும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில்?
- தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், சுதந்திர போராட்ட வீரருமானவர் சங்கரய்யா. இவருக்கு டாக்டர் பட்டம் வழங்குவதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும் படிக்க: Annamalai Pressmeet: சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் அளிக்க வேண்டும் - அண்ணாமலை திட்டவட்டம்..
- வடகிழக்கு பருவமழை தொடங்கியதை முன்னிட்டு தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், சென்னையில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, சென்னையின் முக்கிய நீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தற்போது செம்பரம்பாக்கம் நீர் இருப்பு 22.02 அடியாக உள்ளது. மேலும் படிக்க: Chembarambakkam: துவங்கியது பருவமழை.. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு..! பிற ஏரிகளின் நிலவரம்..
- மத்தி அரசு மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு நீட் தேர்வு நடத்தி வருகிறது. நீட் தேர்வுக்கு தமிழ்நாட்டில் பா.ஜ.க. தவிர மற்ற கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இதுதொடர்பான வழக்குகளும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் நீட் தேர்வை எதிர்க்க அரசியல் கட்சிகளுக்கு உரிமை உள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க: Madras High Court: நீட் தேர்வை எதிர்க்க அரசியல் கட்சிகளுக்கு உரிமை உள்ளது - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி..
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
கிரிக்கெட்
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion