மேலும் அறிய

Annamalai Pressmeet: சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் அளிக்க வேண்டும் - அண்ணாமலை திட்டவட்டம்..

சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக போராடிய சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக போராடியவர் சங்கரய்யா, எனவே சங்கரய்யாவிற்கு டாக்டர் பட்டம் கொடுக்க வேண்டும். சங்கரய்யா உடன் வேறு யாருக்கேனும் பரிந்துரைத்து பட்டியலை தமிழக அரசு  அனுப்பியதா என தெரியவில்லை. தமிழ்நாட்டில் சாதி வன்கொடுமை இருந்து வருகிறது. அரசியல் கட்சி முதல் ஊடகங்கள் மிகவும் கவனமாக கையாண்டு அதனை ஒழிக்க வேண்டும். நேற்று நடந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறேன்.

மதுபான ஊழலில் மணிஷ் சிசோடியாவின் கைது முதல் கைதாகும். இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், அவர் மீது தவறு இருப்பதாக தெரிகிறது, அதனால் பிணை வழங்கப்படாது. அதற்கு பதிலாக விசாரணையை 6 முதல் 8 மாதங்களுக்கும் முடிக்க வேண்டும் என தெரிவித்திருந்தது. தற்போது டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜிர்வாலை ஆஜராக கூறி சம்மன் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் நான் கருத்து கூறுவது சரியாக இருக்காது. தவறு செய்யவில்லை என்றால் ஏன் பயப்பட வேண்டும். ஆந்திராவில் சந்திர பாபு நாயுடுவை ஜெகன் மோகன் ரெட்டி அரசு கைது செய்தது. அதை பற்றி எல்லாம் பேசவில்லை. பாஜக நடவடிக்கை எடுத்தால் மட்டும் ஏன் பேசப்படுகிறது.

இந்தியக் கூட்டணி கண்டிப்பாக உடையும். முறன்பாடு இருக்கும் நபர்கள் ஒரே இடத்தில் இருக்கிறார்கள். டிசம்பர் 3 ஆம் தேதி இந்த கூட்டணி உடையும். 5 மாநில தேர்தலில் சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் பாஜக வெற்றி பெரும். இவை மூன்றும் காங்கிரஸ் ஆளும் மாநிலம். டிசம்பர் 3 ஆம் தேதி ஏற்படப்போகும் விரிசல் அடுத்தாண்டு நடைப்பெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னரே இந்தியக் கூட்டணி இல்லாமல் போய்விடும்.

கடந்த காலங்களில் தமிழர்கள் இலங்கையில் வேலை செய்வதற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இன்று இலங்கை தேயிலையில் முன்னிலையில் இருக்கும் காரணம் அங்கு இருக்கும் தமிழர்கள் தான். தமிழர்கள் இலங்கைக்கு சென்று 200 ஆண்டுகள் ஆகும் நிலையில் இன்று இலங்கையில் ஒரு விழா கொண்டாடப்பாடுகிறது. அதில் மத்திய அமைச்சர்கள் கலந்துக்கொள்கின்றனர். பாஜக தரப்பில் நானும் செல்கிறேன். யார் அரசியலுக்கு வந்தாலும் அதை வரவேற்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget