TN Headlines: தமிழ்நாட்டின் இன்று இதுவரை நடந்தது என்ன? முக்கிய செய்திகள் இதோ!
TN Headlines Today: தமிழ்நாட்டில் இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளின் செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்.
- TN Rain Alert: 8 மற்றும் 9-ஆம் தேதிகளில் கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்களில் ? இன்றைய வானிலை நிலவரம்..
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 8 மற்றும் 9 ஆம் தேதி 13 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 06.10.2023 மற்றும் 07.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 08.10.2023 மற்றும் 09.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் படிக்க
- Teachers Strike: போராட்டம் திடீர் வாபஸ்; அரசு அச்சுறுத்தல் காரணமா? : இடைநிலை ஆசிரியர்கள் சங்கம் அறிவிப்பு
போராட்டத்தை வாபஸ் பெறுவதாக இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் சங்க நிர்வாகி அறிவித்துள்ளார். இதன் பின்னணியில் அரசு மிரட்டல் எதுவும் இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார். ஒரு வாரத்துக்கும் மேலாக ஆசிரியர் சங்கங்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டன. பள்ளிக் கல்வித்துறை வளாகத்தில் இந்தப் போராட்டம் நடைபெற்று வந்தது. இதை அடுத்து பள்ளிக் கல்வித்துறை செயலாளர், தொடக்கக் கல்வி இயக்குநர், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். எனினும் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. மேலும் படிக்க
- IT Raid: திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான 30க்கும் மேற்பட்ட இடங்களில் ரெய்டு - 2வது நாளாக தொடரும் சோதனை..
சென்னையில் 70-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நேற்று முதல் நடத்தி வருகின்றனர். அதில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான 30க்கும் மேற்பட்ட இடங்களும் அடங்கியுள்ளன. குறிப்பாக அடையாறில் உள்ள ஜெகத்ரட்சகனின் விடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. ஜெகத்ரட்சகன் அந்த வீட்டில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தியாகராய நகரில் உள்ள ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான ஓட்டலிலும், வேளச்சேரியில் அவருக்கு சொந்தமாக உள்ள மருத்துவமனையிலும் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் படிக்க
- அமைச்சர் உதயநிதியை சந்தித்து செல்ஃபி எடுத்துக்கொண்ட மாற்றுத்திறனாளி ஆர்வலர்!
கேரளாவில் வசித்து வருபவர் ஆசிம் வெளிமன்னா, மாற்றுத்திறனாளியான இவர் தன்னைப் போல பல மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்காக போராடி வருகிறார். இந்த நிலையில், இவர் தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்தார். சென்னைக்கு தனது குடும்பத்துடன் வருகை தந்த வெளிமன்னா அமைச்சர் உதயநிதியை சந்தித்தார். இந்த சந்திப்பு தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த தம்பி வெளிமன்னா, தன்னைப் போல மாற்றுத்திறனுள்ள குழந்தைகளின் உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுப்பதன் மூலம் உலக அளவில் அறியப்படுகிறார். மேலும் படிக்க
- Latest Gold Silver: மீண்டும் குறையும் தங்கம் விலை.. ஒரு சவரன் எவ்ளோ தெரியுமா? இன்றைய நிலவரம் இதோ..
இன்று (அக்டோபர் 6-ஆம் தேதி) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.80 குறைந்து சவரனுக்கு ரூ.42,280 -க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.10 குறைந்து கிராமுக்கு ரூ. 5,285 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 24 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 46,040 ஆகவும் கிராமுக்கு ரூ.5,755 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் படிக்க