TN Headlines: நீட் தற்கொலை; பேசி தீர்க்க வலியுறுத்தும் தமிழிசை - இதோ தமிழ்நாட்டின் முக்கிய செய்திகள்!
TN Headlines: தமிழ்நாட்டில் இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச்செய்திகளாக காணலாம்.
- விபத்து ஏற்பட்டால் மின் பணியாளர்களே பொறுப்பு - பகிரங்க எச்சரிக்கை விடுத்த மின்சார வாரியம்..
மின்சார பணிகளை மேற்கொள்ளும்போது மின் ஊழியர்கள் பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது. விதிகளை கடைபிடிக்காமல் விபத்து ஏற்பட்டால் விபத்திற்கு மின் ஊழியரக்ளே பொறுப்பு என மின்சார வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் படிக்க: விபத்து ஏற்பட்டால் மின் பணியாளர்களே பொறுப்பு - பகிரங்க எச்சரிக்கை விடுத்த மின்சார வாரியம்..
-
மழைக்கு ரெடியா மக்களே? கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்களில்?
தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
31.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் படிக்க: மழைக்கு ரெடியா மக்களே? கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்களில்?
-
தமிழகத்தில் முதல்வரும், ஆளுநரும் அமர்ந்து பேசி தீர்வு காணலாம் - ஆளுநர் தமிழிசை
ஆளுநர் தமிழிசை செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: அனைத்து மாநில நாட்களையும் ஆளுநர் மாளிகையில் கொண்டாடும்போது தேச ஒற்றுமை ஏற்படும். பல மொழி பேசினாலும், பல மாநிலமாக இருந்தாலும் கலாச்சாரத்தால் நாம் ஒன்றிணைந்துள்ளோம். எனக்கு யாராலும் பாதுகாப்பற்ற நிலை வராது. புதுவையில் பதவியேற்றவுடன் 3 அடுக்கு பாதுகாப்பு இருந்தது. மேலும் படிக்க: தமிழகத்தில் முதல்வரும், ஆளுநரும் அமர்ந்து பேசி தீர்வு காணலாம் - ஆளுநர் தமிழிசை
- நீட் தேர்வால் தொடரும் தற்கொலைகள்: கையெழுத்து இயக்கத்தால் என்ன பயன்? கடும் அரசியல் அழுத்தம் தேவை- அன்புமணி
நீட் அச்சத்தில் மாணவி தற்கொலை செய்துகொண்ட நிலையில், உயிர்க்கொல்லி நீட்டுக்கு முடிவு கட்ட ஆக்கப்பூர்வ நடவடிக்கை தேவை என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு: மேலும் படிக்க: நீட் தேர்வால் தொடரும் தற்கொலைகள்: கையெழுத்து இயக்கத்தால் என்ன பயன்? கடும் அரசியல் அழுத்தம் தேவை- அன்புமணி