TN Headlines: மாவட்டந்தோறும் தோழி மகளிர் விடுதி..நாளை கனமழைக்கு வாய்ப்பு - இன்றைய முக்கியச் செய்திகள்
TN Headlines: தமிழ்நாட்டில் இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச்செய்திகளாக காணலாம்.
தோழி மகளிர் விடுதி: அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு
தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு தோழி மகளிர் பணிபுரியும் விடுதி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று பேசிய சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கூறும்போது, ''பெண்களின் அதிக பணிப் பங்கேற்பை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு தோழி விடுதி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தோழி விடுதிகளில் சேர விரும்பும் பெண்கள் 9499988009 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அல்லது techexe@tnwwhcl.in என்ற இ-மெயில் முகவரிக்கு இமெயில் அனுப்பி, கூடுதல் விவரங்களை அறியலாம். மேலும் வாசிக்க..
அரசு தரும் உதவித்தொகை
பத்தாம் வகுப்பு (தோல்வி), பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கும் மேலாக கல்வித்தகுதிகளை பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, பதிவினைத் தொடர்ந்து புதுப்பித்து, 30.09.2023 அன்றைய நிலையில் ஐந்தாண்டுகளுக்கு மேலாக வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு, தமிழக அரசால் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளை பொறுத்தமட்டில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடித்திருந்தால் போதுமானது.மேலும் வாசிக்க..
விஜய் அடுத்த மக்கள் பணிக்கு தயார்
நடிகர் விஜய் தலைமையில் விஜய் மக்கள் இயக்கம் செயல்பட்டு வருகிறது. இது விரைவில் அரசியல் கட்சியாக மாறலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. ஏற்கனவே உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு விஜய் மக்கள் இயக்கத்தினர் 100-க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று இருக்கின்றனர். விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பல்வேறு அணிகளும் கட்டமைக்கப்பட்டு வருகிறது. மேலும் வாசிக்க..
அண்ணாசாலையில் போக்குவரத்து மாற்றம்
சென்னை அண்ணா சாலையில் இன்று போக்குவரத்து நெரிசலை குறைத்து மக்கள் எந்த சிரமமுமின்றி பயணம் மேற்கொள்ள இன்று முதல் சில போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பை போக்குவரத்து துறை வெளியிட்டது. அதன்படி இன்று முதல் இந்த போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகிறது. இன்று முதல் சென்னை அண்ணா சாலையில் சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகிறது. இது தொடர்பாக போக்குவரத்து துறை வெளியிட்ட அறிவிப்பில், “அண்ணாசாலையில் வாகனங்கள் எளிதாக செல்ல வேண்டிய கீழ்க்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகிறது. இன்று முதல் சோதனை ஓட்டம் நடைபெற இருக்கிறது. மேலும் வாசிக்க..
தேசிய கல்வி உதவித்தொகை
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், 8 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் 60 சதவீதம் மற்றும் அதற்கும் அதிகமாக மதிப்பெண்கள் பெற்ற அனைத்து மாணவர்களும் தேசிய கல்வி உதவித்தொகைத் தளத்தில் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் எனவும், மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே இந்த ஆண்டிற்கான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு இக்கல்வி உதவித்தொகையானது வழங்கப்படும் எனவும் மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க..
வணிக வரி தொடர்பாக சமாதான திட்டம்
நிலுவையில் உள்ள வரியை வசூளிக்க சமாதான திட்டம் அறிமுகம் என சட்டப்பேரவையி 110 விதியின் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், 25,000 கோடிக்கு மேல் வரி வசூல் செய்யப்படாமல் நிலுவையில் உள்ளது என குறிப்பிட்டுள்ளார். முக்கியமாக 50 ஆயிரத்துக்கும் கீழ் உள்ள வணிக வரி தள்ளுபடி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க.