TN Headlines Today: 12ம் வகுப்பு ரிசல்ட்.. காற்றழுத்த தாழ்வு பகுதி...! சுடச்சுட தலைப்புச்செய்திகள்...!
TN Headlines Today: தமிழ்நாட்டில் இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளின் செய்திகளை கீழே காணலாம்.
![TN Headlines Today: 12ம் வகுப்பு ரிசல்ட்.. காற்றழுத்த தாழ்வு பகுதி...! சுடச்சுட தலைப்புச்செய்திகள்...! Tamilnadu latest headlines today may 8th politics latest news abp nadu TN Headlines Today: 12ம் வகுப்பு ரிசல்ட்.. காற்றழுத்த தாழ்வு பகுதி...! சுடச்சுட தலைப்புச்செய்திகள்...!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/08/c7fe1f4d6819f58c75919a2df2296a371683540107962333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
-
TN 12th Result 2023: வெளியானது 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.. தேர்வு முடிவுகளை எப்படி தெரிந்துகொள்வது? முழு விவரம் இதோ..
தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் 2022- 23 ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு அண்மையில் நடைபெற்று முடிந்தது. குறிப்பாக மார்ச் 13ஆம் தேதி தொடங்கிய பிளஸ் 2 பொதுத் தேர்வு, ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்நிலையில், 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியானது. சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.
மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/url-tamil-nadu-12th-result-2023-declared-at-official-website-www-tnresults-nic-in-tn-12th-result-2023-announced-115870
- Apply For Govt Arts & Science Colleges :அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.... எப்படி விண்ணப்பிக்கலாம்? கட்டணம் என்ன?
தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் செயல்பட்டு வரும் 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலைப் பொறியியல் படிப்புகளில் ஒரு லட்சத்து 7,395 இடங்கள் உள்ளன. மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு இன்று தொடங்கிறது. மாணவர்கள் http://www.tngasa.in/ என்ற இணையதளம் வாயிலாக, வரும் 19-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/apply-for-government-arts-and-science-colleges-from-today-how-to-apply-115888
- TN Rain Alert: உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழ்நாட்டில் கன மழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களில்? இன்றைய வானிலை நிலவரம்..
வட தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (08.05.2023) காலை உருவாகியுள்ளது. இது 9-ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று 10 -ஆம் தேதி வாக்கில் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் புயலாக மேலும் வலுபெறக்கூடும். இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 11-ஆம் தேதி வாக்கில் நிலவக்கூடும். அதன் பிறகு வடக்கு-வட கிழக்கு திசையில் திரும்பி வங்கதேசம் - மியன்மார் கடற்கரை நோக்கி நகரக்கூடும். மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/ma-low-pressure-area-has-formed-over-the-southeast-bay-of-bengal-due-to-this-heavy-rain-is-likely-to-occur-in-13-districts-of-tamil-nadu-today-115937
- Neet Human Rights :நீட் தேர்வு மையத்தில் மாணவி உள்ளாடையை கழற்றி சோதனை.. மனித உரிமை மீறல் - அன்புமணி அறிக்கை
நீட் தேர்வு மையத்தில் மாணவியின் உள்ளாடையை கழற்றி சோதனை நடத்தியது மனித உரிமை மீறல், வன்முறை என்றும் விசாரணை நடத்த ஆணையிட வேண்டும் என்றும் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/anbumani-report-violation-of-human-rights-removing-innerwear-of-student-in-neet-exam-center-115919
- PTR Audio Issue: ஆடியோ விவகாரம் காரணமா?.. திமுக பேச்சாளர்கள் பட்டியலில் அமைச்சர் பி.டி.ஆர் பெயர் நீக்கம்..
திமுக 2 ஆண்டு சாதனை விளகக் கூட்ட பேச்சாளர்கள் பட்டியலில் இருந்து நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பெயர் நீக்கப்பட்டு இருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/minister-ptr-pazhanivel-thiyagarajan-name-removed-from-dmk-spoke-person-list-in-2years-annual-celebration-meetings-115872
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)