TN Headlines Today: தமிழ்நாட்டில் இதுவரை நடந்தது என்ன? முக்கிய தலைப்புச்செய்திகள்..!
TN Headlines Today: தமிழ்நாட்டில் இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளின் செய்திகளை கீழே காணலாம்.
- Cm Stalin:உழைப்பவர்களுக்கு மட்டுமே திமுகவில் இடம் - மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் எச்சரிக்கை!
திருவள்ளூர் மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், கோவை மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்தி உள்ளிட்ட 10 மாவட்ட செயலாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சி வேலைகளை பொறுப்போடு செய்யவில்லை என்றால் மாற்றப்படுவீர்கள்.உழைப்பவர்களுக்கு மட்டுமே கட்சியில் இடம் உண்டு, உழைக்காதவர்களுக்கு கட்சியில் இடம் இல்லை.சுணக்கமாக செயல்படும் மாவட்ட செயலாளர்கள் தங்கள் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/dmk-district-secretaries-meeting-cm-stalin-speech-chennai-117519
- கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் உயிரிழப்பு: காவல் ஆய்வாளர்கள் 2 பேர் சஸ்பெண்ட்
விழுப்புரம் : மரக்காணம் கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் பலியான சம்பவம்:- மரக்காணம் காவல் ஆய்வாளர் அருள் வடிவேல் அழகன், மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் மரியா சோபி உள்ளிட்ட 2 காவல்துறை ஆய்வாளர்களை பணியிடை நீக்கம் செய்து டிஜிபி உத்தரவு. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த எக்கியார் குப்பம் கிராமத்தை சேர்ந்த சிலர் கள்ளச்சாராயம் குடித்துள்ளனர்.
இவர்களில் 16 பேர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இவர்களில் சங்கர், சுரேஷ், தரணிவேல் ஆகியோர் உயிரிழந்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள மரக்காணம் காவல்துறையினர் நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து முக்கிய குற்றவாளியான அமரன் என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் மூவரை தேடி வருகின்றனர். மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/marakanam-3-people-died-after-drinking-fake-liquor-two-police-inspectors-suspended-117516
- Mothers day: நாம் எங்கு இருந்தாலும் தாயை கைவிடக் கூடாது.... அன்னையர் தினத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில்அன்னையர் தின விழா நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள ஆளுநர் ரவி, ”நாம் எங்கு இருந்தாலும் தாயை கைவிடக்கூடாது. வளர்ந்து வரும் உலகில் தற்போதைய இளைஞர்கள் பெற்றோர்களை விட்டு விட்டு வேறு பகுதிக்கு செல்கின்றனர். குழந்தைகள் குடும்பத்தினர் வளர்ச்சிக்கு உழைப்பதை அம்மாக்கள் மகிழ்ச்சியாகவே கருதுகின்றனர். தாய் மூலம் மட்டுமே மனிதனுக்கு அன்பு குணம் வருகின்றன” என்றார். மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/we-should-not-abandon-our-mother-governer-rn-ravi-speech-mothers-day-function-chennai-117501
- Speaker Appavu: ஏழை எளிய மக்களை தாங்கி பிடிக்கின்ற பண்புள்ள முதல்வர் நம் முதல்வர் - சபாநாயகர் அப்பாவு பெருமிதம்!
நெல்லையை அடுத்த பாளையங்கோட்டையில் செயல்படும் பார்வைத்திறன் குறைபாடு உடையோர் மேல்நிலைப் பள்ளியில் பழைய மாணவர்கள் பேரவை சார்பில் பழைய மாணவர்கள் சங்கத்தின் கூடுகை விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது, ”கண் தெரியாதோர் குருடர் என்றெல்லாம் பேசுகின்ற நிலை இருந்தபோது கலைஞர் தான் அவ்வாறான இழிவு சொற்களால் அவர்களை அழைக்கக்கூடாது, அவர்கள் மாற்றுத்திறனாளிகள். அவர்களுக்கு மாறுபட்ட திறன் இருக்கின்றது” என்றார். மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/speaker-appavu-said-chief-minister-who-supports-the-poor-and-needy-people-and-the-differently-abled-117471
- Mother's Day 2023: 'தாயினும் சிறந்த கோவிலும் இல்லை' - ஆளுநர், முதலமைச்சர் உள்ளிட்ட தலைவர்கள் அன்னையர் தின வாழ்த்து
அன்னையர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/cm-mk-stalin-greetings-for-mother-s-day-2023-117490