TN Headlines: தமிழ்நாட்டில் இன்று இதுவரை நடந்தது என்ன? முக்கிய செய்திகளின் ரவுண்டப்
TN Headlines: தமிழ்நாட்டில் இன்று நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
- Global Investors Meet: உலக முதலீட்டாளர்கள் மாநாடு.. ரூ. 5.5 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்க திட்டம்..
சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஐந்தரை லட்சம் கோடி அளவிற்கு முதலீடுகள் ஈர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. தொழில்துறை, ஆட்டோ மொபைல், எரிசக்தித்துறை , தகவல் தொழில்நுட்ப துறை, சுகாதாரம் , வீட்டு வசதித்துறை , கைத்தறித்துறை , சுற்றுலா, பண்பாட்டுத்துறைகளில் அதிக முதலீடுகள் ஈர்க்கப்பட உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க
- TN Rain Alert: அடுத்த 4 நாட்களுக்கு கனமழை தொடரும்.. எந்தெந்த மாவட்டங்களில்? இன்றைய நிலவரம்..
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று மற்றும் நாளை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க
- Sabarimala Ayyappan Temple: அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம்.. சபரிமலையில் அரவணை பாயாசத்திற்கு தட்டுப்பாடு..!
கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் அமைந்துள்ளது சபரிமலை ஐயப்பன் கோயில். உலக புகழ்பெற்ற சபரிமலை கோயிலில் ஐயப்பனை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். கார்த்திகை மாதம் முதல் நாள் தொடங்கி மண்டல பூஜை காலம் வரை 41 நாட்கள் ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும். அதனை தொடர்ந்து மகர விளக்கு ஜோதி பூஜைக்காக நடை திறக்கப்பட்டிருக்கும். மேலும் படிக்க
- Kilambakkam Railway Station: கிளாம்பாக்கம் ரயில்வே நிலையம் அமைக்கும் பணிகள் தீவிரம்.. முதற்கட்டமாக ரூ.20 கோடி ஒதுக்கீடு
சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்வதற்காக கோயம்பேட்டில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தது. ஆனால் பண்டிகை நாட்களுக்காக லட்சக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் பயணம் மேற்கொள்வதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னையை கடந்து செல்வதற்கே சுமார் 3 மணிநேரம் வரை ஆனது. இதற்கு தீர்வு காணும் வகையில், கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் கட்டமைக்க திட்டமிடப்பட்டது. மேலும் படிக்க
- Latest Gold Silver Rate: ஹேப்பி நியூஸ் மக்களே.. அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. சவரனுக்கு இவ்வளவா? இன்றைய நிலவரம்..
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.45 குறைந்து ரூ.46,960 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.5,870 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.‘ 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50,720 ஆகவும், கிராம் ஒன்று ரூ.6,340 ஆகவும் விற்பனையாகிறது. மேலும் படிக்க