TN Headlines: தமிழ்நாட்டில் 4 பேருக்கு புதிய வகை கொரோனா; 31-ஆம் தேதி வரை தொடரும் மழை - முக்கிய செய்திகள்
TN Headlines: தமிழ்நாட்டில் இன்று நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
- Corona JN.1 Variant: தமிழ்நாட்டில் 4 பேருக்கு புதிய வகை கொரோனா.. இந்தியாவில் இதுவரை 63 பேருக்கு பாதிப்பு..
தமிழ்நாட்டில் 4 பேருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இந்தியா முழுவதும் 63 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதர துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 4,054 ஆக உயர்ந்துள்ளது. மேலும் படிக்க
- Edappadi Palanisamy : ‘ஜெயலலிதா பாணியை கையிலெடுத்த எடப்பாடி பழனிசாமி’ அதிமுக கூட்டணியில் எஸ்.டி.பி. ஐ கட்சி..?
பாஜகவுடனான கூட்டணி உறவை முறித்துக் கொண்ட பிறகு சிறுபான்மையினர் வாக்குகளை குறித்து வைத்து காய்நகர்த்த தொடங்கியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. 2014 நாடாளுமன்ற தேர்தலில் யாருடனும் கூட்டணி வைக்காமல் அதிமுக தனித்து போட்டியிட்டது. அப்போது பிரச்சாரம் செய்த செல்வி. ஜெ.ஜெயலலிதா, மோடியா இல்லை இந்த லேடியா என்று பார்த்துவிடலாம் என பாஜகவிற்கு சவால்விட்டு, தமிழகத்தில் தன்னுடைய வேட்பாளர்கள் 37 பேரை வெற்றி பெற செய்து, அதிமுகவை இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்துக்கு கொண்டுச் சென்றார். மேலும் படிக்க
- TN Rain Alert:31-ஆம் தேதி வரை தொடரும் மழை.. எத்தனை மாவட்டங்களில் எந்த அளவுக்கு மழைக்கு வாய்ப்பு? விவரம் இதோ..
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, வரும் 31 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் 27 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டிசம்பர் 28 ஆம் தேதி, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் படிக்க
- நிர்மலா சீதாராமன் தன்னை பிரதமராக நினைத்துக்கொண்டு பேசுகிறார் - திருமாவளவன்
திருச்சி மாவட்டத்தில் கட்சி சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை வந்த விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது: அரசியலை நீர்த்துப் போக செய்வதற்கு சில சனாதன சக்திகள் முயற்சி எடுத்துக் கொண்டிருக்கின்றன. தொடர்ந்து பெரியாருக்கு எதிரான அவதூறுகளை பரப்பி வருகின்றனர். பெரியார் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு உரியவர் அல்ல, ஒட்டுமொத்த விளிம்பு மக்களுக்குமானவர் என்பதை உணராத சனாதன சக்திகள் தொடர்ந்து தங்களது காழ்ப்புணர்வை கக்கிக் கொண்டிருக்கின்றனர். மேலும் படிக்க
- Sekar Babu - Tamilisai: வெள்ள பாதிப்பு விமர்சனம்.. ”மொதல்ல ஆளுநர் வேலைய பாக்க சொல்லுங்க” தமிழிசையை சாடிய அமைச்சர் சேகர் பாபு
தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ள சேதங்களை பார்வையிட தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்திரராஜன் வந்த தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது “தென் மாவட்டங்களுக்கு எப்பொழுதுமே மகிழ்ச்சியான தருணத்தில் தான் வருவேன் இன்று சோகமான மன கஷ்டமான தருணத்தில் தான் வந்துள்ளேன். மழை பெய்த 16ம் தேதியிலிருந்து தொடர்ந்து கவனித்து வருகிறேன். மேலும் படிக்க