Corona JN.1 Variant: தமிழ்நாட்டில் 4 பேருக்கு புதிய வகை கொரோனா.. இந்தியாவில் இதுவரை 63 பேருக்கு பாதிப்பு..
தமிழ்நாட்டில் 4 பேருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதர துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 4 பேருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இந்தியா முழுவதும் 63 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதர துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 4,054 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில், கடந்த சில மாதங்களாக தொற்று பாதிப்பு மிகவும் குறைவாக பதிவான நிலையில் தற்போது இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பாதிப்பு சரசரவென உயர்ந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 628 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய தினத்தை ஒப்பிடும் போது சற்று அதிகமாகும். இந்தியாவில் மொத்தமாக 4,054 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக கேரளாவில் 3128 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிக்ச்சை பெற்று வருகின்றனர். அதனை தொடர்ந்து கர்நாடகாவில் 344 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 315 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் கேரளாவைச் சேர்ந்த இரண்டு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டிலும் தினசரி பாதிப்பு ஓரிலக்காக இருந்த நிலையில் தற்போது இரண்டு இலக்காக மாறியுள்ளது. மெல்ல மெல்ல தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் கடந்த 24 மணி நேரத்தில் 29 போருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 20 பேர் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தமாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நபர்களின் எண்ணிக்கை 132 ஆக உள்ளது. அதிகபட்ச பாதிப்பு சென்னையில் 66 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்றைய தினம் சென்னையில் மட்டும் 14 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்கா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகளில் பரவி வந்த புதிய வகை கொரோனாவான JN.1 வகை தற்போது இந்தியாவிலும் பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் 63 பேருக்கு கொரோனாவின் திரிபு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவாவைச் சேர்ந்த 34 பேர், மகாராஷ்டிராவில் இருந்து 9 பேர், கர்நாடகாவில் இருந்து 8 பேர், கேரளாவைச் சேர்ந்த 6 பேர், தமிழ்நாட்டில் 4 பேர், தெலங்கானாவை சேர்ந்த 2 பேர் என மொத்தம் 63 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மத்திய சுகாதார அமைச்சகம் தரப்பில் பொது மக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. கூட்டம் மிகுந்த பகுதிகளில் தனிமனித இடைவெளியை பின்பற்றவும், மாஸ்க் அணிந்து பொது இடங்களுக்கு செல்வதன் மூலம் தொற்று பாதிப்பை பொதுமக்கள் தவிர்க்கலாம். முன்னதாக, கொரோனா தொற்றின் புதிய வேரியண்ட்டான ஜேஎன்.1 கவனிக்கப்பட வேண்டியது எனவும், அதேநேரம் இதனால் ஏற்படும் ஆபத்து என்பது குறைவானது எனவே உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
நிர்மலா சீதாராமன் தன்னை பிரதமராக நினைத்துக்கொண்டு பேசுகிறார் - திருமாவளவன்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

