TN Headlines: தமிழ்நாட்டில் இன்று இதுவரை நடந்தது என்ன? முக்கிய செய்திகளின் ரவுண்டப் இதோ!
TN Headlines: தமிழ்நாட்டில் இன்று நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
- PM Modi Visit TN: பிரதமர் மோடி நாளை தமிழ்நாடு வருகை.. ரூ. 19,850 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடக்கம்.. முழு விவரம் இதோ..
திருச்சியில் விமான நிலைய புதிய முனையம், ரூ.19, 850 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக நாளை தனி விமானம் மூலம் பிரதமர் மோடி திருச்சிக்கு வருகிறார். அவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இதற்காக டெல்லியில் இருந்து நாளை காலை 7 மணிக்கு தனி விமானம் மூலம் திருச்சி வருகிறார். மேலும் படிக்க
- TN Rain Alert: அரபிக்கடலில் உருவாகும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. 2 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..
நேற்று (31-12-2023) தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (01-01-2024) வடமேற்கு திசையில் நகர்ந்து, அதே பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க
- Kilambakkam Bus Terminus : தென் மாவட்ட மக்களுக்கு இந்த அறிவிப்பு.. கிளாம்பாக்கத்தில் இருந்து செயல்படும் பேருந்துகள் விவரம் இதோ..
தென்மாவட்ட பயணிகள் வசதிக்காக வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் ரூ.393 கோடியே 74 லட்சத்தில் 88.52 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். கோயம்பேடு மற்றும் புறநகர் பகுதிகளில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையிலும், வட மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள் எளிதாக பயணத்தை மேற்கொள்ள வசதியாக கடந்த 2018-ம் ஆண்டில் அதிமுக ஆட்சியின்போது, வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கரில் ரூ.393 கோடியே 74 லட்சத்தில் புதிய பேருந்து நிலையப் பணிகள் தொடங்கப்பட்டன. மேலும் படிக்க
- New Year 2024: புதிய சாதனைகளுக்கும், அனுபவங்களுக்கும்.. முதல்வர் உட்பட அரசியல் தலைவர்கள் புத்தாண்டு வாழ்த்து
2023-ஆம் ஆண்டு முடிந்து 2024பிறந்துவிட்டது. பொதுமக்கள் புத்தாண்டை வரவேற்று கொண்டாடும் இவ்வேளையில், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றன. அந்தவகையில் எந்தெந்த அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர் என்பதை இங்கே பார்க்கலாம்.. மேலும் படிக்க
- Sabarimala Temple: சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு செம்ம நியூஸ்.. தேவஸ்தானம் போர்டின் புதிய முயற்சி..
கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் அமைந்துள்ளது சபரிமலை. உலகப்புகழ்பெற்ற சபரிமலை கோயிலில் ஐயப்பனை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். கார்த்திகை மாதம் முதல் நாள் தொடங்கி மண்டல பூஜை காலம் வரை 41 நாட்கள் ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும். அந்த வகையில் கடந்த மாதம் 16 ஆம் தேதி மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. மேலும் படிக்க