TN Headlines: தமிழ்நாட்டில் இன்று இதுவரை நடந்தது என்ன? ரவுண்டப் செய்திகள் இதோ!
TN Headlines: தமிழ்நாட்டில் இன்று நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
மழை வெள்ள பாதிப்பு! கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிய உதயநிதி
சமீபத்தில் மிக்ஜாம் புயலின் காரணமாக பெய்த மழையால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. இந்நிலையில் சென்னையை சேர்ந்த தேவநேயன் அரசு என்ற நபர் விளையாட்டுத்துறை அமைச்சரிடம் தொலைப்பேசி வாயிலாக வைத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் வாசிக்க..
மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்கள் விலை அதிகரிப்பு!
இந்த ஆண்டின் கடைசி முகூர்த்தம் என்பதால் மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்களின் விலை அதிகரிப்பு- மல்லிகை பூ கிலோ 3 ஆயிரத்திற்கு விற்பனை. வரும் நாட்களில் பூக்களின் விலை மேலும் அதிகரிக்கும் என வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் தென்மாவட்டம் மட்டுமின்றி ஆந்திரா கர்நாடக உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பூக்கள் வரவழைக்கப்பட்டு மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டிற்கான கடைசி முகூர்த்தம் என்பதால் பூக்களின் வரத்து குறைவாக இருப்பதாலும் மதுரை மல்லிகை பூ உள்ளிட்ட அனைத்து பூக்களின் விலை அதிகரித்துள்ளது.மேலும் வாசிக்க..
சென்னை அருகே மீண்டும் தென்பட்ட முதலை; அதிர்ச்சி வீடியோ
ஆலப்பாக்கம் மப்பேடு சாலையில் இந்திய விமான நிலைய சுற்றுச்சுவர் அருகே மறுபடியும் ஒரு முதலை காணப்பட்டது. சென்னையில் கடந்த வாரம் கனமழையின் காரணமாக வெள்ளத்தில் சூழ்ந்து பொதுமக்கள் தத்தளித்து வந்தனர். அப்பொழுது பெருங்களத்தூர் பகுதியில் முதலை ஒன்று தென்பட்டது. இரவு நேரத்தில் அந்த முதலை சாலையை ஒய்யாரமாக கடந்து சென்ற காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் அந்த முதலை சாதுவான முதலை எனவும் மக்களை பார்த்தால் அந்த முதலை பயப்படக்கூடிய வகையை சார்ந்தது எனவும் விளக்கம் அளித்திருந்தனர். மேலும் வாசிக்க..
ஸ்ரீரங்கம் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா தொடக்கம் - பக்தர்கள் பரவசம்
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் வெகுவிமரிசையாக நடைபெறும். மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா தனித்துவம்மிக்கது. பகல்பத்து, ராபத்து இயற்பா என மொத்தம் 21 நாட்கள் இந்த விழா நடைபெறும். மேலும் வாசிக்க..
மசோதாக்களுக்கு ஒப்புதல் தருவது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆளுநர் ரவி அழைப்பு
நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்த, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி அழைப்பு விடுத்துள்ளார். உச்சநீதிமன்ற அறிவுறுத்தலை அடுத்து முதலமைச்சரை ஆலோசனைக்கு அழைப்பு விடுத்துள்ளார். மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சீர்செய்த பிறகு சந்தித்து பேசலாம் என, அரசு தரப்பில் ஆளுநருக்கு பதில் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும் விவகாரம் குறித்து ஆளுநர், முதலமைச்சர் அமர்ந்து பேசி தீர்வு காணலாம் என, உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தரப்பில் தொடரப்பட்ட வழக்கு, உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ள நிலையில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க..
எண்ணூரில் எண்ணெய் கசிந்த விவகாரம்; தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அளித்த விளக்கம் என்ன?
எண்ணூரில் கடற்பரப்பில் எண்ணெய் கசிந்த விவகாரம் தொடர்பாக, அறப்போர் இயக்கத்தின் கேள்விகளுக்கு தமிழ்நாடு தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா பதிலளித்துள்ளார்.தனியார் நிறுவனத்திலிருந்து வெளியேறிய எண்ணெய் எண்ணூரில் கடற்பரப்பில் கலந்த விவரகாரம் தொடர்பாக, அறப்போர் இயக்கம் காணொலி ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில் பல்வேறு குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டு இருந்தன. அதற்கு தலைம செயலாலர் சிவ்தாஸ் மீனா விளக்கமளித்துள்ளார். மேலும் வாசிக்க..
110 நாட்களுக்குப் பின் பொதுவெளிக்கு வரும் விஜயகாந்த்
தேமுதிக நிறுவனரான விஜயகாந்த் தலைமையில், நாளை அக்கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.தேமுதிக சார்பில் வெளியான அறிக்கையில், “தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் வருகின்ற 14.12.2023 (நாளை) வியாழக்கிழமை காலை 8.45 மணியளவில், சென்னை, திருவேற்காட்டில் உள்ள GPN பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. அதில் தேமுதிக நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் கலந்து கொள்கிறார். மேலும் கழக பொருளாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் கழகத்தின் ஆக்கப் பணிகள் குறித்தும், எதிர்கால திட்டங்கள் குறித்தும் கலந்து ஆலோசித்து சிறப்புரை ஆற்றவுள்ளார்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க.