மேலும் அறிய
Advertisement
உஷார்! செல்லூர் ராஜூவின் உதவியாளர்? அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.26 லட்சம் மோசடி?
மதுரையில் செல்லூர் ராஜூவின் உதவியாளர் எனக்கூறி, அரசு வேலை வாங்கித் தருவதாக 26லட்ச ரூபாய் மோசடி செய்ததாக மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்.
செல்லூர் ராஜூவின் மருமகனை காட்டி பணத்தை மோசடி செய்த நிலையில் 3 ஆண்டுகளாக பணத்தை திருப்பி தந்துவிடுவேன் எனக்கூறியதால் புகார் அளிக்கவில்லை எனவும், தற்போது தொடர்ந்து ஏமாற்றி வருவதால் புகார் மனு அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பெயரைச் சொல்லி மோசடியா?
மதுரை திருப்பரங்குன்றம் நிலையூரை சேர்ந்தவர் திருமுருகன். இவரிடம் மதுரை பழங்காநத்தம் டி.வி.எஸ் நகரை சேர்ந்த அ.தி.மு.க., வட்டச் செயலாளர் ராஜாராம் என்பவர் கடந்த 2021ம் ஆண்டு அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூவின் உதவியாளர் எனக்கூறி அறிமுகமாகி உள்ளார். தொடர்ந்து செல்லூர் ராஜூ கூட்டுறவுத்துறை அமைச்சராக உள்ளதால் ரேஷன் கடையில் எடை அளவையாளர் அரசு வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். இதை நம்பி திருமுருகன் மற்றும் பலர் சேர்ந்து மொத்தம் 26 லட்ச ரூபாய் பணத்தை ராஜாராமிடம் கொடுத்ததாகவும், ஆனால் ராஜாராம் கூறியபடி எந்தவொரு அரசு வேலையும் வாங்கித்தராமல், தொடர்ந்து ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அமைச்சரின் உதவியாளர் எனக்கூறி பணத்தை மோசடி செய்த ராஜாராம் மீது சட்ட நடவடிக்கை மேற்கொண்டு பணத்தை மீட்டுதரக்கோரி மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் திருமுருகன் புகார் மனு அளித்துள்ளார்.
- PSLV-C59: கடைசி 50 நிமிடத்தில் திடீர் மாற்றம்: இஸ்ரோ ராக்கெட் ஏவுதல் நாளை ஒத்திவைப்பு.! காரணம் என்ன?
தொடர்ந்து ஏமாற்றியதால் புகார்
தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்...,” செல்லூர் ராஜூ கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த போது ராஜாராம் அமைச்சர் பெயரைசொல்லியும், மருமகனை காட்டி பணத்தை மோசடி செய்த நிலையில் 3 ஆண்டுகளாக பணத்தை திருப்பி தந்துவிடுவேன் எனக்கூறியதால் புகார் அளிக்கவில்லை எனவும், தற்போது தொடர்ந்து ஏமாற்றி வருவதால் புகார் மனு அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sabarimala Periya Pathai: “சாமியே சரணம் ஐயப்பா”... பக்தர்கள் விரும்பி செல்லும் பெரிய பாதையின் ரகசியம் தெரியுமா?
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Exclusive : ”நாம் தமிழர் ஒரு பிரிவினைவாத கட்சி” IPS அதிகாரிகள் மாநாட்டில் திருச்சி எஸ்.பி. வருண்குமார் பரபரப்பு பேச்சு..!
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
வணிகம்
தொழில்நுட்பம்
நிதி மேலாண்மை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion