மேலும் அறிய

WFH அரசியல்வாதிக்கு CM ஆசையா ? - விஜய்க்கு எதிராக குவியும் கண்டனங்கள்

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் வரவைத்து, நிவாரண உதவிகள் வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஃபெஞ்சல் புயல் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மழை காரணமாக பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் புதியதாக கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் சார்பில் புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

நிவாரண உதவிகள்

மத்திய சென்னையில் டி.பி. சத்திரம், அமைந்தகரை உள்ளிட்ட பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு சுமார் விஜய் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி தலைமை அலுவலகத்தில் 500க்கும் மேற்பட்ட நபர்கள் வரவேற்கப்பட்டு அவர்களுக்கு நிவாரண உதவிகளை நடிகர் விஜய் வழங்கினார்.

அவர்களுக்கு அரிசி, புது துணிகள் மற்றும் மளிகை பொருட்களை வழங்கி அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார். தொடர்ந்து விஜய் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டது மட்டுமில்லாமல், குழந்தைகளுடன் கலந்துரையாடி குழந்தைகளுக்கு சாக்லேட் உள்ளிட்ட பொருட்களையும் வழங்கி குழந்தைகளை உற்சாகப்படுத்தினார்.

விஜய் மீது விமர்சனம் 

பொதுவாக தமிழ்நாட்டு அரசியல் களத்தை பொருத்தவரை, தலைவர்கள் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து நலத்திட்ட உதவி வழங்குவதுதான் சரியான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அப்போதுதான் பாதிக்கப்பட்ட இடங்கள் குறித்தும், மக்களின் நிலை குறித்தும் தலைவர்கள் நேரடியாக உணர்ந்து கொள்ள முடியும்.‌ ஆனால் அதை விட்டுவிட்டு விஜய் பாதிக்கப்பட்டவர்களின் வீட்டிற்கு வரவைத்து உதவி செய்தது கண் துடைப்பு என விமர்சனம் எழுந்துள்ளது. 

வந்தவர்கள் உண்மையில் பாதிக்கப்பட்டவர்களா என்பதை எப்படி விஜய் உறுதி செய்தார்? மீடியாவில் செய்தி வரவேண்டும் என்பதற்காக இப்படி இதை நடந்து கொண்டாரா? நேரில் செல்வதற்கு விஜய்க்கு என்ன தயக்கம். இன்னும் தன்னை அரசியல்வாதியாக உணராமல் உச்ச நட்சத்திரமாகவே, விஜய் இருந்து வருகிறாரா என்ற கேள்வியும் சமூக வலைதளத்தில் எழுந்துள்ளது.‌ ஒரு சிலர் விஜய் Work From Home அரசியல்வாதியாக செயல்படுவதாக கிண்டலாக விமர்சனம் செய்து வருகின்றனர். மக்களை நேரடியாக சந்திக்காத விஜய்க்கு வருகின்ற 2026 ஆம் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, முதலமைச்சராகும் ஆசை வேற இருப்பதாகவும் கிண்டலாக பதிவு செய்து வருகின்றனர். பெரும்பாலான அரசியல் விமர்சகர்களும், விஜய்யின் இந்த செயல் அவரை பின்னோக்கி இழுத்துச் செல்லும் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

விஜய் தரப்பு விளக்கம் என்ன ?

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மக்களிடமே விஜய் விளக்கம் அளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. "உங்கள் வீடுகளுக்கு வந்து நலத்திட்ட உதவிகளை நான் வழங்கி இருக்கலாம். ஆனால், உங்களுடன் இப்படி அமர்ந்து பேச முடியாது, அங்கு வந்தால் நெரிசல் ஏற்படும். உங்கள் அனைவரிடமும் சிரமம் இல்லாமல் பேச முடியாது. நேரம் செலவிட முடியாது. நேரில் வந்து நிவாரணம் வழங்கவில்லை என்று தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்" என விஜய் விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் ஏற்கனவே பள்ளி மாணவர்களுக்கும் கடந்த முறை புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், உதவிகளை வழங்கிய போது விஜய் திருமண மண்டபங்களை பயன்படுத்தினார். அதே போன்று இப்போதும் மக்கள் இருக்கும் பகுதிக்கு சென்று இந்த உதவியை வழங்கி இருக்கலாம் எனவும் ஒரு சிலர் கருத்துக்களை தெரிவிப்பதை பார்க்க முடிகிறது. விஜயின் இந்த செயல் நிச்சயம் அவருக்கு தலைவலியை ஏற்படுத்தி இருப்பது என்பதில் மாற்று கருத்து இல்லை.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC: மொத்தமா போச்சா..! தேர்வை ரத்து செய்த டிஎன்பிஎஸ்சி, ஷாக்கான தேர்வாளர்கள் - வெடித்த பிரச்னை
TNPSC: மொத்தமா போச்சா..! தேர்வை ரத்து செய்த டிஎன்பிஎஸ்சி, ஷாக்கான தேர்வாளர்கள் - வெடித்த பிரச்னை
TN Rain Update: அடுத்த ரவுண்டா? 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களின் நிலை? வானிலை அறிக்கை
TN Rain Update: அடுத்த ரவுண்டா? 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களின் நிலை? வானிலை அறிக்கை
Power Shutdown ; தமிழகத்தில் இன்று ( 17 - 12 - 2024 ) மின் தடை ஏற்படும் பகுதிகள்
Power Shutdown ; தமிழகத்தில் இன்று ( 17 - 12 - 2024 ) மின் தடை ஏற்படும் பகுதிகள்
Rasipalan December17: மிதுனத்துக்கு விவேகம்; கடகத்துக்கு பரிசு - உங்க ராசிக்கு எப்படி?
Rasipalan December17: மிதுனத்துக்கு விவேகம்; கடகத்துக்கு பரிசு - உங்க ராசிக்கு எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav arjuna Resign VCK : ஆதவ் அர்ஜுனா ராஜினாமா!’’எனக்கு உள் நோக்கமா?’’திருமாவுக்கு பதிலடி!Aadhav Arjuna Joins Vijay TVK : விசிகவுக்கு டாட்டா!தவெகவில் இணையும் ஆதவ்?TARGET திருமாPriyanka Gandhi Palestine bag : Shankar Jiwal Daughter : தமிழ்நாடு DGP-யின் மகள்..ஜெயம் ரவி ஹீரோயின்!யார் இந்த தவ்தி ஜிவால்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC: மொத்தமா போச்சா..! தேர்வை ரத்து செய்த டிஎன்பிஎஸ்சி, ஷாக்கான தேர்வாளர்கள் - வெடித்த பிரச்னை
TNPSC: மொத்தமா போச்சா..! தேர்வை ரத்து செய்த டிஎன்பிஎஸ்சி, ஷாக்கான தேர்வாளர்கள் - வெடித்த பிரச்னை
TN Rain Update: அடுத்த ரவுண்டா? 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களின் நிலை? வானிலை அறிக்கை
TN Rain Update: அடுத்த ரவுண்டா? 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களின் நிலை? வானிலை அறிக்கை
Power Shutdown ; தமிழகத்தில் இன்று ( 17 - 12 - 2024 ) மின் தடை ஏற்படும் பகுதிகள்
Power Shutdown ; தமிழகத்தில் இன்று ( 17 - 12 - 2024 ) மின் தடை ஏற்படும் பகுதிகள்
Rasipalan December17: மிதுனத்துக்கு விவேகம்; கடகத்துக்கு பரிசு - உங்க ராசிக்கு எப்படி?
Rasipalan December17: மிதுனத்துக்கு விவேகம்; கடகத்துக்கு பரிசு - உங்க ராசிக்கு எப்படி?
One Nation One Election: யார் சொன்னாலும் கேட்கமாட்டோம் - இன்று தாக்கலாகிறது ”ஒரே நாடு ஒரே தேர்தல்” மசோதா - மோடி அரசு
One Nation One Election: யார் சொன்னாலும் கேட்கமாட்டோம் - இன்று தாக்கலாகிறது ”ஒரே நாடு ஒரே தேர்தல்” மசோதா - மோடி அரசு
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
Embed widget