மேலும் அறிய

மழை வெள்ள பாதிப்பு! கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிய உதயநிதி - நன்றி தெரிவித்த மக்கள்

மருத்துவ முகாம் , நிவாரணப் பொருட்கள் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிறைவேற்றியதாக சென்னையை சேர்ந்த ஒருவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சமீபத்தில் மிக்ஜாம் புயலின் காரணமாக பெய்த மழையால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. இந்நிலையில் சென்னையை சேர்ந்த தேவநேயன் அரசு என்ற நபர் விளையாட்டுத்துறை அமைச்சரிடம் தொலைப்பேசி வாயிலாக வைத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி:

அவர் பதிவிட்டுள்ளதாவது, ”நேற்றைய முன்தினம்  விளையாட்டுத்துறை மற்றும் சிறப்புப்பணிகள் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் செம்மஞ்சேரி மற்றும் பெரும்பாக்கம் குடியிருப்பு பகுதிகளின் வெள்ள பாதிப்புகளைப் பற்றி  விரிவாக  என்னிடம் தொலைபேசி வழியாக கேட்டறிந்தார்.  உடனடியாக என்னென்ன செய்ய வேண்டும் என்பதை விரிவாகக் கூறினேன். இடமாற்றம் செய்யப்பட்ட பகுதிகளில் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு சிறப்பு அலுவலர்  உடனே நியமிக்க வேண்டும் என்றேன். அன்று மாலையே அதற்கான சிறப்பு  அலுவலர் நியமிக்கப்பட்டார். மருத்துவ முகாம்கள் வீடு தேடி செல்ல வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்தேன்.

இன்று முதல் அது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அனைத்து குடும்பங்களுக்கும்  நிவாரண பொருட்களை வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தேன். இன்று முதல் 6000 மேற்பட்ட குடும்பங்களுக்கான நிவாரணப் பொருட்கள் அவரின் கட்சி சார்பாக  வழங்குவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியோர்களுக்கு பல்வேறு  சிறப்பு முயற்சிகளை உடனே எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தேன்.

நாளை முதல் அதை தொடங்க உள்ளார்கள் என்பதையும் அறிந்தேன். இந்த எளியோன் வைத்த  வேண்டுகோள்களை உடனடியாக செயல்படுத்திக் கொண்டும் மற்றும் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருக்கும்  அமைச்சர் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகளை செம்மஞ்சேரி குடியிருப்புப்பகுதி மக்கள் சார்பாகவும் சமூக அமைப்புகளின் சார்பாகவும் தெரிவித்துக் கொள்கிறேன்". இவ்வாறு அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க: Lok Sabha Security Breach: கையில் புகை குண்டு.. நாடாளுமன்றத்தில் அத்துமீறிய நபர்களால் பரபரப்பு.. என்ன நடந்தது..?

தலைப்பு செய்திகள்

உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்: புதுச்சேரி அணியில் களம் இறங்கும் பஞ்சாப் கிங்ஸ் துணை கேப்டன்!
உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்: புதுச்சேரி அணியில் களம் இறங்கும் பஞ்சாப் கிங்ஸ் துணை கேப்டன்!
சென்னை - திருப்பதி 6 வழிச்சாலை & ஸ்ரீ சிட்டி விரிவாக்கம்! திருப்பதி மாவட்ட வளர்ச்சிக்கான மெகா மாஸ்டர் பிளான்!
சென்னை - திருப்பதி 6 வழிச்சாலை & ஸ்ரீ சிட்டி விரிவாக்கம்! திருப்பதி மாவட்ட வளர்ச்சிக்கான மெகா மாஸ்டர் பிளான்!
புதுச்சேரி நீட் ரேங்க் லிஸ்ட் வெளியானது! முதலிடம் யார்? நெகட்டிவ் மார்க் பெற்றவர்களுக்கு வாய்ப்பா?
புதுச்சேரி நீட் ரேங்க் லிஸ்ட் வெளியானது! முதலிடம் யார்? நெகட்டிவ் மார்க் பெற்றவர்களுக்கு வாய்ப்பா?
பஸ்ஸே வராத உங்கள் ஊருக்கு இனி புது பஸ்! தமிழ்நாடு அரசு வெளியிட்ட செம சர்ப்ரைஸ்!
பஸ்ஸே வராத உங்கள் ஊருக்கு இனி புது பஸ்! தமிழ்நாடு அரசு வெளியிட்ட செம சர்ப்ரைஸ்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
Jio New Plan: பிளான் ஒன்னு..பலன்கள் பல.! வாடிக்கையாளர்களுக்கு அள்ளி வழங்கிய ஜியோ; அசத்தலான புதிய சலுகை திட்டம் என்ன.?
பிளான் ஒன்னு..பலன்கள் பல.! வாடிக்கையாளர்களுக்கு அள்ளி வழங்கிய ஜியோ; அசத்தலான புதிய சலுகை திட்டம் என்ன.?
Otherlab Scooter: இனி சார்ஜிங் கவலையே இல்லை...சூரிய ஒளியில் இயங்கும் ஸ்கூட்டர் அறிமுகம்- விலை, ரேஞ்ச்!
Otherlab Scooter: இனி சார்ஜிங் கவலையே இல்லை...சூரிய ஒளியில் இயங்கும் ஸ்கூட்டர் அறிமுகம்- விலை, ரேஞ்ச்!
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Embed widget