தமிழ்நாட்டில் 8 இடங்களில் வெயில் சதம்: அதிகம் எங்கே?
Tamilnadu Weather: தமிழ்நாட்டில் இன்று வேலூர், மதுரை உள்ளிட்ட இடங்களில் வெயிலானது 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பகல் பொழுதில் வெயில் வாட்ட ஆரம்பித்துவிட்டது. இதனால், மதிய பொழுதில் வெளியே செல்லும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இந்நிலையில் இன்று 8 இடங்களில் 100 டிகிரி ஃபார்ன்ஹீட்டை தாண்டியதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, வேலூரில் 104 டிகிரி, மதுரை மாநகரம் மற்றும் கரூர் பரமத்தியில் தலா 103 டிகிரியும், ஈரோடு, திருச்சி மற்றும் திருத்தணியில் தலா 102 டிகிரியும் சென்னை மீனம்பாக்கத்தில் 100 டிகிரியும் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக வேலூரில் இன்று வெயில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: இண்டர்போலிடம் சென்ற வங்கதேச போலீஸ்: இந்தியாவில் இருக்கும் ஷேக் ஹசீனாவை கைது செய்யுங்கள்!
தமிழ்நாட்டின் வானிலை:
மேலும், தமிழ்நாட்டின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த தருணத்தில் அடுத்த 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருப்பது என்பது குறித்த தகவலை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் வானிலையை பொறுத்தவரை தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த தருணத்தில் அடுத்த 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருப்பது என்பது குறித்த தகவலை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Also Read: Subhanshu Shukla: சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் இந்தியர்: சுபான்ஷூ சுக்லா யார்?
20-04-2025:
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
21-04-2025 முதல் 26-04-2025 வரை:
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வெப்பநிலை :
வெப்பநிலையை பொறுத்தவரை 20-04-2025 மற்றும் 21-04-2025 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2-3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். இதையடுத்து, 22-04-2025 முதல் 24-04-2025 வரை தமிழகத்தில் அதிகப்பட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம்| ஏதுமில்லை எனினும், ஓரிரு இடங்களில் சற்று உயரக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை:
இன்று (20-04-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

