மேலும் அறிய
Tamilnadu Roundup: தமிழ்நாட்டை நெருங்கும் புயல்.. விஜய்யின் அடுத்த நகர்வு.. 10 மணி செய்திகள் இதோ!
Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் நவம்பர் 28ம் தேதியான இன்று காலை முதல் தற்போது வரை நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு செய்திகள்
Source : X
- தொடர்மழை காரணமாக ராமேஸ்வரம் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. கடலில் மணிக்கு 65 கி.மீ., வேகத்தில் சூறைக்காற்று வீசுவதால் பாம்பன் பாலத்தில் ரயில்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு மண்டபம் வரை மட்டுமே இயக்கப்படுகிறது.
- டிட்வா புயல் சென்னைக்கு 560 கிலோ மீட்டர் தூரத்திலும், புதுச்சேரிக்கு 460 கி.மீ. தூரத்திலும் தென் கிழக்கு திசையில் மையம் கொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்வதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- டிட்வா புயல் பாதிப்பை தவிர்க்க அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தவிட்டுள்ளார்.
- தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனித்துவமாக செயல்பட வேண்டும் என்பதே என்னுடைய விருப்பமாகும். பாஜகவுடன் அவர் காட்டும் இணக்கம் நிச்சயம் பயன் தராது என விசிக தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
- செங்கோட்டையனை தொடர்ந்து மாற்றுக் கட்சியில் இருக்கும் முக்கிய தலைவர்களை தங்கள் பக்கம் இழுக்க தவெக தலைவர் விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம் பாமகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.
- சென்னை ஒன் செயலி மூலம் மாதாந்திர பேருந்து பயண அட்டை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் வசதி, டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று கல்விக்கடன் முகாம் நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தகவல் தெரிவித்துள்ளார். அந்த மாவட்டத்தைச் சேர்ந்த கல்விக்கடன் தேவைப்படும் மாணவர்கள் உரிய ஆவணங்களுடன் வருமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
- திருவண்ணாமலையில் இருந்து சபரிமலைக்கு புறப்பட்ட ஐயப்ப பக்தர்களின் பேருந்து சிதம்பரம் அருகே பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 18 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- கனமழை காரணமாக கடந்த நவம்பர் 24ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்ட மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழத்தின் தேர்வானது டிசம்பர் 5ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தொடர்மழை காரணமாக காய்கறி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கத்தரிக்காய் ஒரு கிலோ ரூ.120க்கு விற்பனை செய்யப்படுவதால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.
- டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. பேரிடர் மீட்பு படையினரும் அந்தந்த ஊர்களுக்கு முன்னெச்சரிக்கையாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















