TN Headlines: அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. மாற்றுப்பாதையில் மெட்ரோ சேவை..? தமிழ்நாடு ரவுண்ட் அப் இதோ!
TN Headlines: தமிழ்நாட்டில் காலை முதல் இதுவரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
-
TN Weather Update: சுட்டெரிக்கும் சூரியன் ஒருபக்கம்.. அடித்து வெளுக்கும் மழை ஒருபக்கம்.. வானிலை எப்படி இருக்கும்?
தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. அதேபோல், குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் படிக்க..
-
Metro Train: சிறுசேரி- கிளாம்பாக்கம் கிடையாதாம்! திருப்போரூர் - கேளம்பாக்கம் மாற்றுப்பாதையில் மெட்ரோ சேவை?
சென்னையில் முதல் கட்டமாக வண்ணாரப்பேட்டையில் இருந்து விமானநிலையம் வரை முதல் வழித்தடத்தில் (நீல வழித்தடம்) 23.085 கிலோ மீட்டர் தூரமும், சென்னை சென்டிரலில் இருந்து பரங்கிமலை வரை 21.91 கி.மீ தூரம் உள்பட 2 வழித்தடங்களில் 45.046 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்பட்டு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் படிக்க..
-
விமர்சனங்களை தாங்கிக் கொள்ள முடியாததால் சவுக்கு சங்கர் கைது - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் 70வது பிறந்தநாள் முன்னிட்டு சேலம் மாநகர் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது இல்லத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இதன் ஒரு பகுதியாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், வைகைச் செல்வன், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் நேரில் வந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் படிக்க..
-
Mettur Dam: தொடர்ந்து அதிகரிக்கும் நீர்வரத்து! மேட்டூர் அணையின் தற்போதைய நிலவரம் என்ன?
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 21 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 33 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 57 கன அடியாக அதிகரித்துள்ளது.அணையின் நீர் மட்டம் 50.78 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 18.30 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 90 வது ஆண்டாக கடந்த ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. மேலும் படிக்க..
-
Latest Gold Silver Rate: அப்பாடா! திங்கள் கிழமையே குறைந்த தங்கம் விலை..! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ. 53,800-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.6,725 விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.57,560 ஆகவும், கிராம் ஒன்று ரூ.7,195 ஆகவும் விற்பனையாகிறது.
"தென்னிந்தியாவின் மான்செஸ்டர்" என்றழைக்கப்படும் கோயம்புத்தூரில் (Gold Rate in Coimbatore ) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.7,195 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.6,725 ஆகவும் விற்பனையாகிறது. மேலும் படிக்க..