மேலும் அறிய

Mettur Dam: தொடர்ந்து அதிகரிக்கும் நீர்வரத்து! மேட்டூர் அணையின் தற்போதைய நிலவரம் என்ன?

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 1,400 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் நிறுத்தப்பட்டு, குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 21 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 33 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 57 கன அடியாக அதிகரித்துள்ளது. 

Mettur Dam: தொடர்ந்து அதிகரிக்கும் நீர்வரத்து! மேட்டூர் அணையின் தற்போதைய நிலவரம் என்ன?

நீர்மட்டம்:

அணையின் நீர் மட்டம் 50.78 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 18.30 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 90 வது ஆண்டாக கடந்த ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது குறுவை, சம்பா அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் மேட்டூர் அணையில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 1,400 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் நிறுத்தப்பட்டு, குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.

மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அனல் மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. அணையில் தண்ணீர் மிகவும் குறைவாக உள்ளதால் 16 கண் மதகுகள் மூடப்பட்டுள்ளது. குடிநீர் தேவைக்காக கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த தண்ணீர் நிறுத்தப்பட்டது. மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 1,200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Mettur Dam: தொடர்ந்து அதிகரிக்கும் நீர்வரத்து! மேட்டூர் அணையின் தற்போதைய நிலவரம் என்ன?

கர்நாடக அணைகள்:

கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 92.97 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 17.78 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 167 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 4338 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 50.38 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 11.38 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 151 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 2150 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன் , மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் , திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்க கடலில் கலக்கிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம் ரத்து - டி.ஆர்.பாலு பங்கேற்பார் என தகவல்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம் ரத்து - டி.ஆர்.பாலு பங்கேற்பார் என தகவல்
Ilaiyaraaja: அரைவேக்காடு நெட்டிசன்களே! இளையராஜா கேட்கும் ராயல்டி பற்றி என்ன தெரியும்! விஷயம் இதுதான்!
Ilaiyaraaja: அரைவேக்காடு நெட்டிசன்களே! இளையராஜா கேட்கும் ராயல்டி பற்றி என்ன தெரியும்! விஷயம் இதுதான்!
Prakash Raj: “தியானம் மாதிரி தெரியல.. நாடகம் மாதிரி இருக்கு” - பிரதமர் மோடியை விமர்சித்த பிரகாஷ்ராஜ்!
“தியானம் மாதிரி தெரியல.. நாடகம் மாதிரி இருக்கு” - பிரதமர் மோடியை விமர்சித்த பிரகாஷ்ராஜ்!
சென்னையில் அதிர்ச்சி! வெயிலின் தாக்கத்தால் 12ம் வகுப்பு மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு..!
சென்னையில் அதிர்ச்சி! வெயிலின் தாக்கத்தால் 12ம் வகுப்பு மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு..!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Encounter Velladurai Suspended : வெள்ளதுரை சஸ்பெண்ட்! சாட்டையை சுழற்றும் அமுதா IAS.. காரணம் என்ன?Prajwal Revanna Arrest :  ”பொறுமையை சோதிக்காதே வந்துடு” எச்சரித்த தேவகவுடா! பிரஜ்வல் ரேவண்ணா கைது!Mettupalayam : ”சுத்தம் செய்ய முடியாது” தட்டி கேட்ட இளைஞருக்கு அடி! கோவை கவுன்சிலர் அடாவடி!Swiggy Delivery Guy arrest : எல்லை மீறிய SWIGGY ஊழியர்.. தட்டி தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம் ரத்து - டி.ஆர்.பாலு பங்கேற்பார் என தகவல்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம் ரத்து - டி.ஆர்.பாலு பங்கேற்பார் என தகவல்
Ilaiyaraaja: அரைவேக்காடு நெட்டிசன்களே! இளையராஜா கேட்கும் ராயல்டி பற்றி என்ன தெரியும்! விஷயம் இதுதான்!
Ilaiyaraaja: அரைவேக்காடு நெட்டிசன்களே! இளையராஜா கேட்கும் ராயல்டி பற்றி என்ன தெரியும்! விஷயம் இதுதான்!
Prakash Raj: “தியானம் மாதிரி தெரியல.. நாடகம் மாதிரி இருக்கு” - பிரதமர் மோடியை விமர்சித்த பிரகாஷ்ராஜ்!
“தியானம் மாதிரி தெரியல.. நாடகம் மாதிரி இருக்கு” - பிரதமர் மோடியை விமர்சித்த பிரகாஷ்ராஜ்!
சென்னையில் அதிர்ச்சி! வெயிலின் தாக்கத்தால் 12ம் வகுப்பு மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு..!
சென்னையில் அதிர்ச்சி! வெயிலின் தாக்கத்தால் 12ம் வகுப்பு மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு..!
Breaking Tamil LIVE : திருமலை திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த உள்துறை அமைச்சர் அமித்ஷா
Breaking Tamil LIVE : திருமலை திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த உள்துறை அமைச்சர் அமித்ஷா
Ajith Kumar: அஜித் வளர்ச்சியைப் பார்த்து மகிழ்ச்சி.. அவரின் முதல் தெலுங்கு படத்தில் நான் செய்தது.. சிரஞ்சீவி நெகிழ்ச்சி!
Ajith Kumar: அஜித் வளர்ச்சியைப் பார்த்து மகிழ்ச்சி.. அவரின் முதல் தெலுங்கு படத்தில் நான் செய்தது.. சிரஞ்சீவி நெகிழ்ச்சி!
Crime: ரீல்ஸ் மூலம் ஆண் நண்பருடன் பழக்கம்! கொலை வழக்கில் சிக்கிய பெண் இன்ஸ்பெக்டர் கைது - என்ன நடந்தது?
Crime: ரீல்ஸ் மூலம் ஆண் நண்பருடன் பழக்கம்! கொலை வழக்கில் சிக்கிய பெண் இன்ஸ்பெக்டர் கைது - என்ன நடந்தது?
ஜெயலலிதா குறித்து அண்ணாமலை சொன்னதில் தவறில்லை  - டிடிவி தினகரன்
ஜெயலலிதா குறித்து அண்ணாமலை சொன்னதில் தவறில்லை - டிடிவி தினகரன்
Embed widget