(Source: ECI/ABP News/ABP Majha)
விமர்சனங்களை தாங்கிக் கொள்ள முடியாததால் சவுக்கு சங்கர் கைது - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
காங்கிரஸ் தலைவர் கொலை வழக்கில் கொலையாளி கண்டறியாமல் இருப்பதற்கு காவல்துறையினருக்கு முழு சுதந்திரம் அளிக்காததே காரணம் - அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் 70வது பிறந்தநாள் முன்னிட்டு சேலம் மாநகர் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது இல்லத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இதன் ஒரு பகுதியாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், வைகைச் செல்வன், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் நேரில் வந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியது, தமிழ்நாட்டில் போதைபொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த முதல்முறையாக தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது என்பதே தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டு என்பதற்கு உதாரணம். கடந்த 3 ஆண்டு கால திமுக ஆட்சி என்பது சாதனை அல்ல, 30 ஆண்டுகால சோதனை. இந்த 3 ஆண்டுகளில் மின்கட்டணம் உயர்வு, வீட்டு வரி, குடிநீர் வரி, சொத்து வரி என அனைத்து வரி இனங்கள் பன்மடங்கு உயர்வு, குழந்தைகள் குடிக்கும் பால் உள்பட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு என மக்களை இந்த அரசு வஞ்சித்துள்ளது. இதற்கு தீர்வாக தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மீண்டும் அமைவது தான் என மக்கள் புரிந்து கொண்டார்கள. நெல்லை கிழக்கு காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெயக்குமார் கொலை வழக்கில் இதுவரை கொலையாளிகள் கண்டறியபடாததற்கு திமுக அரசு காவல்துறைக்கு முழு சுதந்திரம் வழங்காதது தான். ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையான தமிழ்நாடு காவல்துறைக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தால் ஒரு மணி நேரத்தில் கொலையாளி கைது செய்யப்பட்டிருப்பார்கள். சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டது கட்டணத்திற்குரியது. விமர்சனங்களை தாங்கிக் கொள்ள முடியாத திமுக அரசு சவுக்கு சங்கரை கைது செய்துள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வம், "அதிமுக எப்போதும் எடப்பாடி பழனிசாமியின் தலைமையில்தான் இயங்கும். 2 கோடி தொண்டர்களும் எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்றுக் கொண்டு வெற்றிகரமாக நாடாளுமன்ற தேர்தல் பணி செய்து வெற்றிக்காக காத்திருக்கிறார்கள்” என்றார். தொடர்ந்து அமைச்சர் ரகுபதியின் கருத்திற்கு பதிலளித்த வைகைச் செல்வன், இன்றும், என்றும் எப்போதும் இபிஎஸ்தான் அதிமுக பொதுச்செயலாளர் அதில் எந்த மாற்றமும் இல்லை என்றார். திமுகவின் மூன்றாண்டு கால ஆட்சி சாதனை அல்ல, சோதனை என்ற அவர், மின் தட்டுப்பாட்டினை சீர் செய்யாமல் மின் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டது கண்டனத்துக்குரியது என்றும் தெரிவித்தார்.