TN Headlines: ”உழைப்பாளிகள் உயரணும்” - முதலமைச்சர்; மஞ்சள் அலர்ட்- தமிழ்நாட்டில் இதுவரை இன்று
3PM Headlines: தமிழ்நாட்டில் காலை முதல் இதுவரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.
CM Stalin: ”உழைப்பாளிகளின் குடும்பங்கள், பொருளாதாரம் உயர்ந்திடணும்”- முதல்வர் மே தின வாழ்த்து
உழைப்பாளிகளின் குடும்பங்கள் மற்றும் பொருளாதாரம் உயர்ந்து உன்னத நிலை பெற வேண்டும் என முதலமைச்சர் மே தின வாழ்த்து தெரிவித்துள்ளார். மே தின வாழ்த்து செய்தியில் முதலமைச்சர் தெரிவித்துள்ளதாவது, ”காண்பதெல்லாம் தொழிலாளி செய்தான்" என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தொழிலாளர்களின் தியாக உழைப்பைப் போற்றிப் பாடுவார். தொழிற்சாலைகளில் குறைந்த ஊதியத்தில் பல மணி நேரம் வேலை செய்திட வாட்டி வதைக்கப்பட்ட தொழிலாளர் சமுதாயம் எட்டு மணி நேர வேலை முறையான ஊதியம் ஆகியவற்றை வலியுறுத்தி ரத்தம் சிந்திப் போராடி உயிர்ப் பலி தந்து தொழிலாளர் சமுதாயம் பெற்ற உரிமை வரலாற்றை நினைவுபடுத்தும் நாள்தான் மே நாள்!. மேலும் படிக்க..
TN Weather Update: தமிழ்நாட்டில் 43 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.. 3 நாட்களுக்கு வெப்ப அலை ..
தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மேலும் படிக்க
Ammonia Gas Leak: கோவை உருளைக்கிழங்கு சிப்ஸ் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு.. மக்கள் வெளியேற்றம்..!
கோவை மாவட்டம் காரமடை சிக்காரம்பாளையத்தில் தனியார் உருளைக்கிழங்கு சிப்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில் இயங்கி வருகிறது. இதில் பராமரிப்பு பணியின் போது அமோனியா வாய் கசிவு ஏற்பட்டது. காரமடை அருகே உள்ள சிக்காரம்பாளையம் ஊராட்சியில் தனியாருக்கு சொந்தமான உருளைக்கிழங்கு சிப்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வந்தது. பல்வேறு காரணங்களால் இந்த தொழிற்சாலை மூடப்பட்டது. மேலும் படிக்க..
Mettur Dam: மூன்றாவது நாளாக 82 கன அடியில் நீடிக்கும் மேட்டூர் அணையின் நீர்வரத்து.
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 82 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 82 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 82 கன அடியாக அதிகரித்துள்ளது. மேலும் படிக்க..
TN Weather Update: வதைக்கும் வெயில்.. மே 2 மற்றும் 3-ஆம் தேதி மஞ்சள் அலர்ட்.. எந்தெந்த மாவட்டங்களுக்கு?
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக அதிகபட்சமான வெப்பநிலை பதிவாகி வருகிறது. எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு மே மாதம் முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 10 மாவட்டங்களில் 40 டிகிரி செல்சியஸ் கடந்து வெப்பநிலை பதிவாகியுள்ளது. அடுத்த 4 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை என்பது 43 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...