TN Headlines: சொந்தங்களை பார்க்க வந்திருக்கிறேன்- முதல்வர்; பார்முலா கார் ரேஸ்; செம்மரக்கட்டைகளை கடத்திய டிஎஸ்பி: இதுவரை இன்று
Tamilnadu Headlines Today: தமிழ்நாட்டில் காலை முதல் இதுவரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பை இங்கே காணலாம்.
இந்திய சொந்தங்களின் முகங்களை பார்க்கவும் வந்திருக்கிறேன்- முதலமைச்சர் ஸ்டாலின்
தொழில் முதலீடுகளை ஈர்க்க நான் வந்திருந்தாலும் என் இனிய இந்திய சொந்தங்களின் முகங்களை பார்க்கவும் வந்திருக்கிறேன். ஜனநாயக நாடுகளான இந்தியாவும், அமெரிக்காவும் உலகின் மிக முக்கியமான நாடுகள். உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக அமெரிக்கா உள்ளது என்றால் இந்தியா 5வது மிகப்பெரிய பொருளாதார நாடாக உள்ளது.
அமெரிக்கா – இந்தியா இடையேயான நட்பு பல்லாண்டு காலமாக தொடர்ந்து வருகிறது. அமெரிக்கா- இந்தியா இடையே வர்த்தகம், பொருளாதாரம், கணினி ஆகிய துறைகளில் நல்லுறவு தொடர்கிறது. அமெரிக்காவுக்கு அதிகளவில் குடிபெயர்ந்த மக்கள் எண்ணிக்கை 2வது இடத்தில் இந்தியா உள்ளது. ஒட்டுமொத்த உலகின் நலனுக்கு இந்தியா – அமெரிக்கா உறவு மிக மிக முக்கியம். புகழ்பெற்ற அமெரிக்க நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் நிறுவனங்களை நடத்தி வருகின்றன. கடந்த 2 ஆண்டுகளாக அமெரிக்க நிறுவனங்கள் தமிழ்நாட்டில் அதிகளவு முதலீடுகள் செய்து வருகின்றன.
செம்மரக்கட்டைகளை கடத்திய வேலூர் கலால்துறை டிஎஸ்பி தங்கவேலு நிரந்தர பணிநீக்கம்:
செம்மரங்களை கடத்திய வேலூர் கலால் துறை டிஎஸ்பி தங்கவேலு நிரந்தர பணியிடம் நீக்கம் செய்த டிஜிபி சங்கர் ஜிவால்..
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பாலூர் பகுதியைச் சேர்ந்தவர் பாமக பிரமுகரான சின்னபையன் இவர் கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் சந்தன மரக்கடத்தல் கும்பலால் கொலை செய்யப்பட்டார். இக்கொலைச் சம்பவம் தொடர்பாக ஆம்பூர் கிராமிய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தபோது வேலூர் மாவட்ட கலால் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளராக இருந்த தங்கவேலு, சின்னபையனுக்கு சொந்தமான கோழி பண்ணையில் இருந்த 7 டன் செம்மரக் கட்டைகளை கடத்திச் சென்றது விசாரணையில் தெரியவந்ததுள்ளது.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோவிலில் நந்தி பகவானுக்கு சனி பிரதோஷம்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோவிலில் ஆவணி மாத சனி பிரதோஷம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்க கூடிய அண்ணாமலையார் கோவிலில் இன்று பிரதோஷம் பக்தர்கள் வெள்ளத்தில் எளிமையாக நடைபெற்றது. இந்த நந்திக்கு மாதத்தில் இரண்டு முறை அபிஷேகங்கள் நடைபெறும், அமாவாசை ,பௌர்ணமி என வரும் இரண்டு நாட்கள் முன்பாக நடைபெறும்.
தர்மபுரி : திடீரென அடுத்தடுத்து ஆய்வில் ஈடுபட்ட ஆட்சியர்..
விவசாயிகளுக்கு அற்புதமான மதிப்பு கூட்டு பொருள் தயாரிக்கும் இயந்திரம் வழங்கி மாவட்ட ஆட்சியர் அசத்தல்.
பாப்பிரெட்டிப்பட்டி அருகே உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனத்தின் மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்கும் புதிய இயந்திரத்தின் செயல்பாட்டினை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தொடங்கி வைத்தார்.
சென்னையை நோக்கி ஹரியானாவில் இருந்து 11 கோடி ரூபாய் மதிப்பிலான 1500-ஐ போன்களை ஏற்றிச் சென்ற கண்டெய்னர் லாரி கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
iPhones Stolen: சென்னைக்கு வந்த 1500-ஐ போன்கள்.. லாரியுடன் கடத்திச்சென்ற கொள்ளையர்கள் : எப்படி?
ஹரியானா மாவட்டத்தில் அமைந்துள்ளது குருகிராம். இங்கிருந்து ரூ.11 கோடி மதிப்புள்ள 1500 ஐ போன்களை ஏற்றிக் கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது, மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சாகர் பகுதியில் இந்த கண்டெய்னர் லாரியை மர்மநபர்கள் திருடிச்சென்றுள்ளனர்.