TN Headlines: உயர்கல்வியில் தமிழ்நாடு பெருமிதம்; அடுத்து 5 நாட்களுக்கு அதிகரிக்கும் வெப்பம் - இதுவரை ரவுண்ட் அப்
Tamilnadu Headlines: தமிழ்நாட்டில் காலை முதல் இதுவரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
![TN Headlines: உயர்கல்வியில் தமிழ்நாடு பெருமிதம்; அடுத்து 5 நாட்களுக்கு அதிகரிக்கும் வெப்பம் - இதுவரை ரவுண்ட் அப் Tamilnadu headlines Latest News May 26th 3 PM headlines Know full updates here TN Headlines: உயர்கல்வியில் தமிழ்நாடு பெருமிதம்; அடுத்து 5 நாட்களுக்கு அதிகரிக்கும் வெப்பம் - இதுவரை ரவுண்ட் அப்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/27/04b63d7445c63d9732705f5cc603cb7c1716800429525572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஜூன் 1-க்குள் ஏஜெண்ட்டுகளுக்கு அடையாள அட்டை; மே 29 முதல் வாக்கு எண்ணிக்கை பயிற்சி: ராதாகிருஷ்ணன் பேட்டி
மே 29 ஆம் தேதி முதல் வாக்கு எண்ணும் மையங்களில் பணி செய்யக்கூடியவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாகவும் வாக்கு எண்ணும் பணிக்கு கூடுதல் மேற்பார்வையாளர்கள் பணியமர்த்தப்பட உள்ளதாகவும் மாவட்டத் தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
TN Weather Update: 5 நாட்களுக்கு 2 முதல் 3 டிகிரி வரை வெப்பநிலை அதிகரித்து காணப்படும்.. மழை இருக்குமா?
தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரித்து காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 27.05.2024 முதல் 31.05.2024 வரை: அடுத்த 5 தினங்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக 2-3° செல்சியஸ் படிப்படியாக உயரக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேட்டூர் அணையின் நீர்வரத்து 575 கன அடியில் இருந்து 390 கன அடியாக குறைந்தது.
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 784 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 575 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 390 கன அடியாக குறைந்துள்ளது.
CM Stalin: முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் உயர் கல்வியில் தமிழ்நாடு முதலிடம்: அரசு பெருமிதம்
புதுமைப்பெண் திட்டத்தால் கல்லூரியில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை 34 சதவீதம் அதிகரித்துள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
உயர் கல்வித்துறையில் 49 சதவீத மாணவர் சேர்க்கையுடன் முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்வதாகவும் பெருமிதம் தெரிவித்துள்ளது. முதல் தலைமுறை பட்டதாரிகளின் கல்விக் கட்டணத்துக்கான ரூ.1000 கோடி ஆண்டுதோறும் செலவிடப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
School Reopening SOP : போதைப்பொருள் எதிர்ப்பு: பள்ளிகள் திறப்பில் எதற்கெல்லாம் முக்கியத்துவம்? வழிகாட்டல் வெளியீடு
காலை வணக்கக் கூட்டத்தில் 6 முதல் 12 வகுப்பு உள்ள பள்ளிகளில் போதை எதிர்ப்பு சார்ந்த தகவல்கள்/கருத்து பரிமாற்றம் சார்ந்து பேச்சு/கவிதை/ சுவரொட்டி/ நாடகம்/ பாட்டு/ கதைகள் இடம்பெற உள்ளது.
2024- 2025 ஆம் கல்வியாண்டில் பள்ளிகள் ஜூன் 6ம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்பு மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் மற்றும் இக்கல்வியாண்டில் செயல்படுத்தப்பட வேண்டிய கல்விச் செயல்பாடுகள், கல்வி இணைச் செயல்பாடுகள், கல்வி சாராச் செயல்பாடுகள் குறித்து பின்வரும் அறிவுரைகளைப் பின்பற்றி செயல்பட வேண்டும் என்று அனைத்துக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)