TN Headlines: ”நீலகிரிக்கு வரவேண்டாம்”; குலசேகரப்பட்டினத்தில் விண்வெளி தொழிற்சாலை: இதுவரை இன்று
TN Headlines: தமிழ்நாட்டில் காலை முதல் இதுவரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
Kulasekarapattinam: குலசேகரப்பட்டினத்தில் விண்வெளி தொழிற்சாலை மற்றும் உந்துசக்தி பூங்கா - டிட்கோ அறிவிப்பு..
இஸ்ரோ தமிழ்நாட்டில் இரண்டாவது தளத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவிற்கு அடுத்தப்படியாக தூதுக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் இரண்டாவது ஏவுதளம் அமைக்க திட்டமிட்டுள்ளது. பல்வேறு ஆய்வு பணிகளுக்கு பின் குலசேகரப்பட்டினம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2,376 ஏக்கர் பரப்பளவில் ரூ.950 கோடி மதிப்பீட்டில் கட்டுமான பணிகள் 99% முடிவடைந்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் (டிட்கோ) குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா அமைப்பதற்கு இஸ்ரோவின் இன்ஸ்பேஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் வரவேண்டாம் - ஆட்சியர் அறிவுறுத்தல்..
அடுத்த 3 நாட்களுக்கு நீலகிரி மாவட்டத்தில் மிக கனமழை இருக்கும் என்பதால் சுற்றுலா பயணிகள் பயணத்தை ஒத்திவைக்கும் படி நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். அல்லது பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பயணத்தை திட்டமிடும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.
EPS On Stalin: ”தமிழ்நாட்டை சிந்தெடிக் போதைப்பொருட்களின் புகலிடமாக மாற்றிய திமுக” - எடப்பாடி பழனிசாமி சாடல்
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “சென்னை விமான நிலையத்தில் 22 கோடி ரூபாய் மதிப்பிலான கொக்கைன் மற்றும் எம்டிஎம்ஏ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது. விடியா திமுக ஆட்சியில் அதிகரிக்கும் போதைப்பொருள் புழக்கம் குறித்து தொடர்ச்சியாக நான் எச்சரித்து வந்தும், இந்த விடியா அரசு அதனை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, திமுக அயலக அணி நிர்வாகியாக இருந்த ஒருவர், சர்வதேச போதைப்பொருள் மாபியாவாக இருந்த செய்தியே வந்து சேர்ந்தது.
சென்னை விமானநிலையத்தில் கொத்தாக மாட்டிய கும்பல்! சிக்கிய போதை பொருள்! ரூ.22 கோடி மதிப்பாம்!
வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு விமானங்களில் கடத்திக் கொண்டு வரப்பட்ட, ரூ.22 கோடி மதிப்புடைய, போதைப் பொருள் மற்றும் போதை மாத்திரைகளை, மத்திய போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்து, நைஜீரியா, பிரேசில் நாடுகளைச் சேர்ந்த 4 பேர் உட்பட, மொத்தம் 5 பேரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Teachers Counselling: ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வுக்கு குவியும் விண்ணப்பம்; விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், தொழிற்கல்வி ஆசிரியர்கள், கலை ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பணியிட மாறுதல் கலந்தாய்வுகள் மே மாதம் 24ஆம் தேதி தொடங்க உள்ளன. இந்தக் கலந்தாய்வு ஜூன் மாதம் 15-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எமிஸ் இணையதளம் மூலமாக இந்தக் கலந்தாய்வு நடைபெற உள்ளது.
பல்வேறு ஆசிரியர்கள் சங்கங்கள் மற்றும் ஆசிரியர்களிடமிருந்து மாறுதலுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறு வரப்பெற்ற கோரிக்கையினை ஏற்று, பொதுமாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் காலஅளவை கூடுதலாக 7 நாட்களுக்கு நீட்டித்து 25.05.2024 வரை விண்ணப்பிக்கலாம்.