TN Headlines:கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள்தண்டனை,கொடுநாடு விசாரணைக்கு இன்டர்போல்:இதுவரை இன்று
Tamilnadu Headlines: தமிழ்நாட்டில் காலை முதல் இதுவரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
Fire Accident: சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 4 பேர் உயிரிழப்பு, மீட்பு பணிகள் தீவிரம்
சாத்தூர் அருகே உள்ள பந்துவார்பட்டியில் செயல்படும் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். வார இறுதி நாட்கள் என்பதால் தொழிலாளர்கள் பெரும்பாலானோருக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் அதிக உயிர்சேதம் ஏற்படுவது தடுக்கப்பட்டுள்ளது. 3 அறைகள் முழுமையாக சேதமடைந்துள்ள நிலையில் தீயணைப்புத்துறையினர் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில் காவல்துறையினர், வருவாய்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டாசு தயாரிக்க வெடி மருத்து கலவை உருவாக்கியபோது உராய்வு ஏற்பட்டு விபத்து நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
கலைஞரின் கனவு இல்லம் வேண்டுமா? - நாளை நடக்கும் கிராம சபை கூட்டத்திற்கு வாங்க.!
திருவண்ணாமலை மாவட்டத்தில் வீடு இல்லாதவர்கள் மற்றும் வீடு இடிந்து விழும் நிலையில் உள்ளவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு கடைசி வாய்ப்பாக நாளை நடக்கும் கிராம சபை கூட்டத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
CM Stalin: மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதாவை, தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் முத்துசாமி தாக்கல் செய்தார்.
அதன்படி, இனி தமிழ்நாட்டில் இனி கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள்தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா: மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் அமைச்சர் தாக்கல் செய்தார். அதில் கள்ளச்சாராய விற்பனைக்கு தற்போது வழங்கப்படும் தண்டனை போதுமானதாக இல்லாததால் திருத்தம் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் விற்பனை, பதுக்கல் என அனைத்துவிதமான குற்றங்களையும் தடுக்கும் வகையில் சட்டதிருத்தம் செய்யப்பட்டுள்ளது. கள்ளச்சாராய விற்பனை, தயாரிப்புக்கு வழங்கப்படும் தண்டனைகள் போதுமானததாக இல்லாததால் சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது
கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக பேசுகையில், “கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் 24 மணி நேரத்தில் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டது
. இதுதொடர்பாக ஒருநபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. அமைச்சர்கள், உள்துறை செயலாளர், டிஜிபி ஆகியோரை சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தேன். அரசின் நடவடிக்கைகள் போதவில்லை என எதிர்க்கட்சிகள் கூறுவது தோல்வியை மறைக்கும் முயற்சி மற்றும் திசை திருப்பும் நாடகம். வழக்கு விசாரணையில் நாங்கள் எதை மறைத்தோம் சிபிஐ விசாரணையை கோருவதற்கு? நாங்கள் எதையும் மறைக்கவில்லை. முழுமையாக அரசு விசாரித்து வருகிறது. ஒருவர் கூட தப்பாமல் இருக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக பேசுகையில், “கொடநாடு வழக்கில் இதுவரை 268 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. குற்றவாளிகளின் 8 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கொடநாடு வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்புள்ளதா என விசாரிக்க இன்டர்போல் உதவியை நாடியுள்ளோம்” என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளே, மக்களே மேட்டூர் அணையின் இன்றைய நீர்வரத்து என்ன தெரியுமா?
மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், வினாடிக்கு 1,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 89 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 43 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு இரண்டாவது நாளாக 43 கன அடியாக நீடித்து வருகிறது.
School Holiday: தொடர் கனமழை எதிரொலி - நீலகிரியில் 2 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள 2 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது