TN Headlines: போதைப்பொருள் குறித்து மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ், நீட் தீர்மானம் நிறைவேற்றம்! இதுவரை இன்று
Tamilnadu Headlines: தமிழ்நாட்டில் காலை முதல் இதுவரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டு வந்த நிலையில், அது நிறைவேற்றப்பட்டது. தேசிய அளவில் நீட் தேர்வு முறை கைவிடப்படும் வகையில் தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தில் தேவைப்படும் திருத்தங்களை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டுமென்றும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது
Thalapathy Vijay: "எனக்கு பயமா இருக்கு” - போதைப்பொருள் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
இளைஞர்களிடையே அதிகரித்துள்ள போதைப் பொருட்கள் பயன்பாடு ஒரு தந்தையாக மிகுந்த அச்சமாக உள்ளது என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா திருமண மண்டபத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய் பங்கேற்று மாணவ, மாணவியர்களை கௌரவித்தார். 12 ஆம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு வைர கம்மல் வழங்கினார்.
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
கட்சியை ஆரம்பித்து எதை நோக்கி நாம் பயணப்படுகிறோம் என்பது தான் இலக்காக இருக்க முடியும். விஜய் எந்த இலக்கோடு வரப்போகிறார் என்பதை இன்னும் 2, 3 மாதங்களில் தெரிந்து விடும். போதைப்பொருள் பயன்பாடு அரசுக்கு தெரியாமல் நடந்துவிட்டது என சொன்னால் நம்ப முடிகிறதா? விஜய் மட்டுமல்ல அனைவருக்கும் என்ன உண்மை என்பது தெரியும். என்னை மாதிரி விஜய் நேரடியாக பேச வேண்டும் என ஏன் நினைக்கிறீர்கள். அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கிறது. அதை வெளியிட வேண்டும். விஜய நடந்ததை வெளிப்படையாக சொல்லாமல் குறியீடாக தான் சொல்கிறார்” என சீமான் தெரிவித்துள்ளார்.
மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 43 கன அடியாக குறைவு மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், வினாடிக்கு 1,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பி உள்ளன. இருப்பினும் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 89 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 89 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 43 கன அடியாக குறைந்துள்ளது.
Elephant: கூடலூரில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட யானைக்குட்டி
Elephant: கூடலூரில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட யானைக்குட்டி, கடும் முயற்சிக்குப் பிறகு பத்திரமாக கரையேறி உயிர் பிழைத்தது.