TN Headlines:நீங்க பொதுச்செயலாளரா, நீதிபதி கேள்வியால் இபிஎஸ் ஷாக்..!டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு: இதுவரை இன்று
Tamilnadu Headlines Today: தமிழ்நாட்டில் காலை முதல் இதுவரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பை இங்கே காணலாம்.
Madras HC on EPS: நீங்க அதிமுக பொதுச்செயலாளரா? எப்படி? நீதிமன்றம் கொடுத்த ஷாக்! அப்செட்டில் இபிஎஸ்! குஷியில் ஓபிஎஸ் !
Madras High Court on Edappadi Palanisamy: ஆனால் தற்போது பதில் மனுத்தாக்கல் செய்தபோது அதிமுக பொதுச்செயலாளர் என மனுத்தாக்கல் செய்துள்ளார்.
நீதிபதி நீங்கள் எப்படி பொதுச்செயலாளர் எனக்கூற முடியும். அதிமுக பொதுச்செயலாளர் வழக்கு நிலுவையில் இருக்கும்போது உங்களை எப்படி பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு மனுத்தாக்கல் செய்ய முடியும் என கேள்வி எழுப்பினார். மேலும், மனுவை திருத்தி மீண்டும் தாக்கல் செய்யுங்கள் என நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து தனது தவறுக்காக மன்னிப்பு கோரிய இபிஎஸ் தரப்பு திருத்தப்பட்ட மனுத்தாக்கல் செய்ய உள்ளது. இதையடுத்து இதுகுறித்த வழக்கு ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Madras High Court: சமூக நீதி பேசும் அரசு; பள்ளிகளில் சாதிப் பெயரை நீக்குங்கள்- சென்னை உயர் நீதிமன்றம்!
Caste Based Terms in TN Govt Schools: மக்கள் வரிப்பணத்தில் நடைபெறும் பள்ளிகளுக்கு எதற்கு சாதிப் பெயர்? தெருக்களில் சாதிப் பெயர் நீக்கப்பட்டது போல, அரசுப் பள்ளிகளில் உள்ள சாதிப் பெயரை நீக்க வேண்டும்.
சமூக நீதி பற்றி அரசு பேசும் நிலையில், அரசுப் பள்ளிகளில் சாதிப் பெயரை நீக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.
Ramadoss: மீண்டும் ஓர் இட ஒதுக்கீடு போராட்டம்... தயாராகும் பாமக ... களத்தில் இறங்கிய வன்னியர் சங்கம்
இடஒதுக்கீடு பெற பாமகவும், வன்னியர் சங்கமும் எந்தவித தியாகத்திற்கு தயாராக உள்ளது. பெரிய போராட்டத்திற்கு தயாராகி வருகிறது - மருத்துவர் ராமதாஸ்
விழுப்புரம்: மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டக்கூடாது, தமிழ்நாட்டுக்கான உரிய நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் மருத்துவர் ராமதாஸ் கேட்டுக்கொண்டார்.
TNPSC: இன்டர்வியூ இல்லை; மருத்துவம், பொறியியல் தொழில்நுட்பத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Combined Technical Services Exam: இந்தத் தேர்வுக்கு இன்று (ஜூலை 26) முதல் செப்டம்பர் 24ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். செப்.28 முதல் 30ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் செய்யலாம்.
தொடர் கனமழையால் நிரம்பிய பில்லூர், ஆழியார் அணைகள்; கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக நடப்பாண்டில் மூன்றாவது முறையாக பில்லூர் அணை நிரம்பியுள்ளது.
Mayor Election Announced : "ஆகஸ்ட் 6ஆம் தேதி தேர்தல் என அறிவிப்பு” மேயர், நகராட்சி சேர்மன் மறைமுகமாக தேர்ந்தெடுக்க முடிவு..!"
ராஜினாமா, இறப்பு உள்ளிட்ட காரணங்களால் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 6ஆம் தேதி தேர்தல நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது