TN Headlines: சென்னையில் ஃபார்முலா 4 கார் ரேஸ்: கூகுள் நிறுவனத்தில் முதல்வர் ஸ்டாலின்: இதுவரை இன்று..!
Tamilnadu Headlines Today: தமிழ்நாட்டில் காலை முதல் இதுவரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பை இங்கே காணலாம்.
கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் - முதல்வர் ஸ்டாலின்
அமெரிக்கா நாட்டின் கலிபோர்னியாவில் கூகுள் நிறுவனமும் தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனமும் இணைந்து தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) ஆய்வகங்களை அமைப்பது குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தம், முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.
Formula 4 Car Race: சென்னையில் இன்று ஃபார்முலா 4 கார் ரேஸ்!
தெற்காசியாவில் முதன்முறையாக கார் பந்தயம் பகலிரவு போட்டியாக சென்னையில் இன்று முதல் முறையாக நடைபெறுகிறது. இதையடுத்து, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
Mettur Dam: தொடர்ந்து அதிகரிக்கும் மேட்டூர் அணையின் நீர்வரத்து - வினாடிக்கு 6,396 கன அடியாக உயர்வு
மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 14,200 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.
பொத்தேரியில் 1000 போலீசார் கஞ்சா வேட்டை... சிக்கிய பிரபல ரவுடி..
கிலோ கணக்கில் போதைப்பொருள் பறிமுதல் செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி பகுதியில் நடைபெற்ற போலீசாரின் கஞ்சா வேட்டையில், ஏராளமான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
NIT கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: விடுதி காப்பாளர் பேபி ராஜினாமா
விடுதியின் பெண் காப்பாளர் பேபி தன் பொறுப்பை ராஜினாமா செய்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் விடுதி காப்பாளர்கள் 2 பேர் திங்களன்று ராஜினாமா செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர பகுதியில இயங்கி வரும் என்.ஐ.டி. மாணவிகள் விடுதியில் மாணவிகளின் வசதிக்காக ஒவ்வொரு அறையிலும் இணையதள சேவை அளிப்பதற்காக நேற்று முந்தினம் காலை ஒப்பந்த ஊழியர்கள் 5 பேர் சென்றுள்ளனர். அப்போது அங்கு விடுதியில் உள்ள ஒரு அறையில் மாணவி தனியாக இருக்கும் போது இணையதள சேவை அளிப்பதற்காக வந்த ஊழியர்களில் ஒருவரான கதிரேசன் அந்த மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். அச்சமயத்தில் சாதுரியமாகச் சுதாரித்துக் கொண்ட மாணவி வெளியே ஓடிவந்து சத்தம்போட, அங்கிருந்த மற்ற மாணவர்கள் கதிரேசனை பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
சென்னை வெள்ளத் தடுப்பு திட்டங்கள் குறித்த திருப்புகழ் குழு அறிக்கையை வெளியிட வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
சென்னையின் வெள்ளம் என்பது பெருந்துயரத்தை ஏற்படுத்தும் பேரிடர் ஆகும். அதில் தமிழக அரசு அலட்சியம் காட்டக் கூடாது.
சென்னை வெள்ளத்தடுப்புத் திட்டங்கள் குறித்த திருப்புகழ் குழு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு 13 மாதங்களாகியும் தமிழக அரசு வெளியிடாதது ஏன் என பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
எந்த கல்வி கொள்கையை திணித்தாலும் ஏற்க முடியாது; தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை தான் - அமைச்சர் பொன்முடி திட்டவட்டம்
எந்த கல்வி கொள்கையை திணித்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள நாங்கள் தயாராக இல்லை, இரு மொழிக்கொள்கை என்பதில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.