மேலும் அறிய

TN Headlines: கோவை நீலகிரிக்கு ஆரஞ்சு அலர்ட்; 24,700 பேருக்கு வேலைவாய்ப்பு - தமிழ்நாடு அரசு: இதுவரை இன்று

Tamilnadu Headlines Today: தமிழ்நாட்டில் காலை முதல் இதுவரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பை இங்கே காணலாம்.

TamilNadu Rain: இன்று 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்; 8 மாவட்டங்களுக்கு கனமழை:

தமிழ்நாட்டில்  இன்று 2 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும், 8 மாவட்டங்களுக்கு கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இன்று மழை பெறும் மாவட்டங்கள்:

நீலகிரி மற்றும் கோவை ஆகிய 2 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, தென்காசி, நெல்லை மற்றும் குமரி ஆகிய 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

NIRF Ranking 2024: இந்தியாவிலேயே முதலிடம்: மருத்துவம், பொறியியல், கலை அறிவியல்.. தரவரிசையில் தமிழகம்தான் டாப்!- முழு பட்டியல்!

NIRF Ranking 2024 in Tamil Nadu: நாடு முழுவதும் உள்ள 926 கல்வி நிறுவனங்களில் 165 கல்வி நிலையங்கள் தமிழ்நாட்டில்தான் உள்ளன. 

மத்தியக் கல்வி அமைச்சகம் சார்பில் நாட்டின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் )  என்ஐஆர்எப் பட்டியலில் (National Institutional Ranking Framework) தமிழ்நாட்டில் இருந்து ஏராளமான கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. நாடு முழுவதும் உள்ள 926 கல்வி நிறுவனங்களில் 165 கல்வி நிலையங்கள் தமிழ்நாட்டில்தான் உள்ளன

புதிய முதலீடுகள் மூலம் 24,700 பேருக்கு வேலை வாய்ப்பு: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்!

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன

சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அமைச்சரவை கூட்டம் நிறைவுபெற்றதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, "15 முதலீட்டு திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது" என்றார்.

3 முக்கிய கொள்கைகளுக்கு ஒப்பதல்: தொடர்ந்து விரிவாக பேசிய அவர், "44,125 கோடி ரூபாய்க்கு புதிய முதலீடுகள் வந்துள்ளன. புதிய முதலீடுகள் மூலம் 24,700 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகும். பசுமை எரிசக்தி துறையில் 3 முக்கிய கொள்கைகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது" என்றார்.

சென்னையை கலக்கிய பிரபல ரவுடி... என்கவுண்டரில் சுட்டுப்பிடித்து அதிரடி காட்டிய போலீஸ்.

சென்னையை சேர்ந்த பிரபல ரவுடி, ரோஹித் ராஜன் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டார்.

சென்னையில் டி.பி.சத்திரத்தில் காவலர்களை தப்பி செல்ல முடிகின்ற ரவுடி ரோஹித் ராஜனை சுட்டுப் போலீசார் காலில் சூட்டு பிடித்தனர்  . ரோஹித் ராஜன் தாக்கியதில் 2 போலீசாருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ரோஹித் ராஜன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் விளக்கம்.

மேட்டூர் அணையின் நீர்வரத்து 26,000 கன அடியில் இருந்து 45,000 கன அடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 36,000 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதன் காரணமாக அன்புள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி, காவிரி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கர்நாடகா மாநிலம் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 20,505 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 26,000 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 45,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

ஒரே நேரத்தில் 300 நாதஸ்வர - தவில் வித்வான் கலைஞர்கள்! களைகட்டிய இசை கச்சேரி!

கரூர் நெரூர் அக்னீஸ்வரர் ஆண்டு விழாவில் நாதஸ்வரம், தவில் வித்வான்கள் கலந்து கொண்ட இசை நிகழ்ச்சியில் 300-க்கும் மேற்பட்ட நாதஸ்வர, தவில் வித்வான்கள் கலந்து கொண்டு சிவபெருமானின் பாடல்களை இசைத்தனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழக கபடி வீராங்கனைகளுக்கு பஞ்சாப்பில் என்னாச்சு? இப்போ நிலை என்ன? – உதயநிதி பேட்டி
தமிழக கபடி வீராங்கனைகளுக்கு பஞ்சாப்பில் என்னாச்சு? இப்போ நிலை என்ன? – உதயநிதி பேட்டி
வேங்கைவயல் வழக்கில் பட்டியல் இனத்தவர்கள் குற்றவாளிகளா? கொதித்தெழுந்த திருமா! அரசுக்கு முக்கிய கோரிக்கை!
வேங்கைவயல் வழக்கில் பட்டியல் இனத்தவர்கள் குற்றவாளிகளா? கொதித்தெழுந்த திருமா! அரசுக்கு முக்கிய கோரிக்கை!
ஐயப்ப பக்தர்களே... சபரிமலையில் விரைவில் ரோப்கார் சேவை துவக்கம்
ஐயப்ப பக்தர்களேச.. பரிமலையில் விரைவில் ரோப்கார் சேவை துவக்கம்
TVK Invited by Governor: ஆளுநர் தேநீர் விருந்து: தவெகவிற்கு அழைப்பு...
ஆளுநர் தேநீர் விருந்து: தவெகவிற்கு அழைப்பு...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”பாஜகவோட கூட்டணி இல்ல” நிதிஷ் கொடுத்த வார்னிங்! குழப்பத்தில் பாஜககாதல் திருமணம் செய்த பெண்! கத்தியுடன் வந்த குடும்பம்! காரில் கடத்திய பகீர் காட்சிLorry accident | சாலையை கடக்க முயன்ற தம்பதி அடித்து தூக்கிய சரக்கு லாரி பகீர் CCTV காட்சி! | Madurai

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழக கபடி வீராங்கனைகளுக்கு பஞ்சாப்பில் என்னாச்சு? இப்போ நிலை என்ன? – உதயநிதி பேட்டி
தமிழக கபடி வீராங்கனைகளுக்கு பஞ்சாப்பில் என்னாச்சு? இப்போ நிலை என்ன? – உதயநிதி பேட்டி
வேங்கைவயல் வழக்கில் பட்டியல் இனத்தவர்கள் குற்றவாளிகளா? கொதித்தெழுந்த திருமா! அரசுக்கு முக்கிய கோரிக்கை!
வேங்கைவயல் வழக்கில் பட்டியல் இனத்தவர்கள் குற்றவாளிகளா? கொதித்தெழுந்த திருமா! அரசுக்கு முக்கிய கோரிக்கை!
ஐயப்ப பக்தர்களே... சபரிமலையில் விரைவில் ரோப்கார் சேவை துவக்கம்
ஐயப்ப பக்தர்களேச.. பரிமலையில் விரைவில் ரோப்கார் சேவை துவக்கம்
TVK Invited by Governor: ஆளுநர் தேநீர் விருந்து: தவெகவிற்கு அழைப்பு...
ஆளுநர் தேநீர் விருந்து: தவெகவிற்கு அழைப்பு...
ஆயுதத் தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து: 5 பேர் பலி! மற்றவர்களின் நிலை? என்ன நடந்தது?
ஆயுதத் தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து: 5 பேர் பலி! மற்றவர்களின் நிலை? என்ன நடந்தது?
இன்ஸ்டா பழக்கத்தால் ஏமாந்த சென்னை பெண் -  திண்டுக்கல் எஸ்பி அலுவலகத்தில் புகார்
இன்ஸ்டா பழக்கத்தால் ஏமாந்த சென்னை பெண் - திண்டுக்கல் எஸ்பி அலுவலகத்தில் புகார்
ரவுடிகளுக்கு எதுக்கு இந்த பெயர்? – போலீசுக்கு அதிரடி உத்தரவு போட்ட நீதிமன்றம்
ரவுடிகளுக்கு எதுக்கு இந்த பெயர்? – போலீசுக்கு அதிரடி உத்தரவு போட்ட நீதிமன்றம்
சீமானிடம் போட்டோ கொடுத்ததே நான்தான் - ராஜீவ்காந்தி
சீமானிடம் போட்டோ கொடுத்ததே நான்தான் - ராஜீவ்காந்தி
Embed widget