மேலும் அறிய
Advertisement
Tamilnadu Round Up: துறைவாரியாக முதல்வர் ஆய்வு! 10 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு - தமிழகத்தில் தற்போது வரை
Tamilnadu RoundUp: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே விரிவாக காணலாம்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று துறைவாரியான ஆய்வுக்கூட்டம் தொடக்கம் – முதல் நாளான இன்று பள்ளிக்கல்வித்துறையின் மீது ஆய்வுக்கூட்டம்
- வட இந்தியாவில் கொண்டாடப்படும் சத்பூஜை; ஆயிரத்திற்கும் மேற்பட்ட வட இந்தியர்கள் மெரினாவில் கொண்டாட்டம்
- தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
- சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்யும் விவகாரம்; வழிமுறைகளை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு
- சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் இன்றும் மழை தொடரும் – வானிலை ஆய்வு மையம் தகவல்
- அமலாக்கத்துறை போலவே காவல்துறையிலும் சொத்துக்களை பயன்படுத்தும் அதிகாரம் – ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பயன்படுத்தும் போலீஸ்
- தொகுதி, வார்டு வாரியாக அறிக்கை அளிப்பதற்காக அ.தி.மு.க. கள ஆய்வுக்குழுவை அமைத்தார் எடப்பாடி பழனிசாமி
- திருவாரூரில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – கனமழை காரணமாக மாவட்ட ஆட்சியர் உத்தரவு
- 15ம் தேதி முதல் சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம் – பக்தர்கள் மகிழ்ச்சி
- சூரசம்ஹாரம் நேற்று நடந்ததையடுத்து திருச்செந்தூரில் இன்று திருக்கல்யாணம்
- கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மணலியில் 12 செ.மீட்டர் மழை பதிவு – சாலைகளில் தேங்கிய மழைநீரால் மக்கள் அவதி
- பல்கலைக்கழகங்களில் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை – மீறனால் நடவடிக்கை
- நாம் தி.மு.க. கூட்டணியிலே தொடர்வோம் என தொண்டர்களுக்கு திருமாவளவன் கடிதம்
- மதுரை அரசு மருத்துவமனையின் உறுதித்தன்மையை ஆய்வு செய்ய குழு அமைத்து உத்தரவு பிறப்பித்தது சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை
- மண் சரிவு, கனமழைக்கு பிறகு மேட்டுப்பாளையம் – ஊட்டி மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது
- திருப்பூரில் உரிய ஆவணம் இன்றி தங்கியிருந்த வங்கதேச இளைஞர் கைது – சென்னை புழல் சிறையில் அடைப்பு
- திருக்கழுக்குன்றம் காவல் நிலையம் அருகே வழக்கறிஞர்கள் திடீர் சாலை மறியல் – போக்குவரத்து கடும் பாதிப்பு
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
பொழுதுபோக்கு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion