Tamilnadu Roundup: சென்னையில் 71 இண்டிகோ விமானங்கள் ரத்து.. காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம் - தமிழகத்தில் இதுவரை
தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

இந்தியா முழுவதும் இண்டிகோ விமான சேவை பாதிப்பு - பயணிகள் தொடர்ந்து அவதி
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் குடமுழுக்கு விழா - லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்
பழனி திருஆவினன்குடி கோயில் குடமுழுக்கு - லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்
சென்னையில் இன்று 71 இண்டிகோ விமானங்கள் ரத்து - கடும் அதிருப்தியில் பயணிகள்
தமிழ்நாட்டில் சமத்துவ தீபமே ஒளிரும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
23 தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கத்திற்கு இன்று அடிக்கல் நாட்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடக்கிறது - முக்கிய அறிவுறுத்தல்களை வழங்க மு.க.ஸ்டாலின் திட்டம்
கேரம் உலகக்கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீரர்கள், வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு
அயோத்தி போல தமிழ்நாட்டிலும் பாஜக தோல்வி அடையும் என்பதை நயினார் ஒப்புக்காெண்டுள்ளார் - ஆர்எஸ் பாரதி
தருமபுரியில் போராட்டத்தின்போது போலீசாரின் கையை கடித்த தவெக தொண்டர் - கைது செய்த போலீஸ்
கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மட்டும் 40 ஆயிரம் போக்சோ வழக்குகள் பதிவு - நாடு முழுவதும் 5.28 லட்சம் வழக்குகள் பதிவு
10 மாதங்களில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடியாதா? சீமான் கேள்வி
தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் - அமித்ஷா
கீழக்கரையில் இருந்து இலங்கைக்கு யானை தந்தம் கடத்த முயன்ற 3 பேர் கைது
காவிரி நீர் மேலாண்மை ஆணைய 46வது கூட்டம் இன்று டெல்லியில் கூடுகிறது
நெல்லை அருகே வழிவிடும் விவகாரம்: அரசு பேருந்தை வழிமறித்து தாக்கிய வேன் ஓட்டுநர்
நடிகை பாலியல் வழக்கு; பிரபல மலையாள நடிகர் திலீப் உள்பட 9 பேருக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு





















