மேலும் அறிய
Advertisement
Tamilnadu Roundup: போராட்டத்தில் இறங்கும் பாமக.. சென்னையில் தொடங்கும் மலர் கண்காட்சி- பரபர 10 மணி செய்திகள்
Tamilnadu Round Up: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
- சென்னை செம்மொழிப் பூங்காவில் மலர்க் கண்காட்சியை இன்று(ஜன.2) தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து பாமக மகளிரணி சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று நடைபெற உள்ள போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு.
- அரையாண்டு விடுமுறைக்கு பின் பள்ளிகள் இன்று திறப்பு! விடுமுறை நீட்டிக்கப்படும் என கூறப்பட்ட நிலையில், வகுப்புகள் இன்று தொடங்கப்படுவதை உறுதி செய்தது பள்ளிக்கல்வித்துறை.
- தமிழக அரசின் பொங்கல் பரிசுக்கான டோக்கனை நாளை (ஜன.3) முதல் நியாயவிலைக் கடை ஊழியர்கள் வீடுவீடாகச் சென்று வழங்க உள்ளனர்.
- மயிலாடுதுறை: வீட்டு ஜன்னலை உடைத்து 15 பவுன் நகைகள் கொள்ளை – போலீசார் விசாரணை.
- மதுரையில் ஆன்லைன் மூலம் கேரள லாட்டரிகளை விற்றதாக தலைமைக் காவலர் பிரகாஷ், பாலாஜி, கனி ஆகியோர் கைது.
- ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை அருகே ஆலங்குளம் என்ற இடத்தில் 2 அரசு பேருந்துகள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டதில் இரு பேருந்துகளில் பயணித்த 25 பேர் படுகாயம்!
- பொதுமக்களிடம் புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
- செய்யாறு ஆரணி சாலையில் அரசுப் பேருந்தும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம்.
- “எனக்கு எந்த அரசியல் பின்புலமும் கிடையாது” - யூடியூபர் இர்ஃபான் வீடியோ பதிவு
- ராமநாதபுரம் அருகே லாரி மீது ஆம்புலன்ஸ் மோதிய விபத்து - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு
- தமிழ்நாட்டில் கன்னியாகுமரி உள்ளிட்ட 13 நகராட்சிகள், 25 பேரூராட்சிகள் புதிதாக உதயம். சென்னை உட்பட 16 மாநகராட்சி எல்லைகளை விரிவாக்கம் செய்யவும் அரசாணை வெளியீடு!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
அரசியல்
இந்தியா
வணிகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion