மேலும் அறிய
Tamilnadu Roundup: கரையை கடந்த புயல்-நின்ற மழை, SIR-இன்று அனைத்து கட்சி கூட்டம், தங்கம் விலை மீண்டும் உயர்வு - 10 மணி செய்திகள்
Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் இன்று காலை முதல் தற்போது வரை நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.

10 மணி தலைப்புச் செய்திகள்
Source : ABP
- வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக இன்று அனைத்துக் கட்சி கூட்டம். திமுக, அதிமுக உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட 12 கட்சிகளுக்கு தேர்தல் அதிகாரி அழைப்பு.
- தமிழக விவசாயிகளின் உரத் தேவையை பூர்த்தி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்குமாறும் மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்.
- தவெகவின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க, இன்று பனையூரில் நிர்வாகக் குழு கூட்டம் கூடுகிறது. இதற்காக, புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட 28 பேர் கொண்ட குழுவை நேற்று அறிவித்தார் விஜய்.
- ஆந்திராவின் காக்கிநாடா அருகே நரசப்பூர் பகுதியில் நள்ளிரவில் கரையை கடந்தது மோன்தா புயல். கரையை கடக்கும் போது 110 கி.மீ வேகத்தில் வீசிய சூறைக்காற்று.
- தமிழ்நாட்டில் இன்று முதல் வரும் 3-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இல்லை எனவும், ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல். மழை நின்றதையடுத்து சென்னையில் எட்டிப்பார்த்த வெயில்.
- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.1,080 அதிகரித்த நிலையில், ஒரு சவரன் ரூ.89,680-க்கும், கிராமிற்கு ரூ.135 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,210-க்கும் விற்பனை.
- ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து வரும் நவம்பர் 2-ம் தேதி மாலை தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ள நிலையில், பழவேற்காடு உட்பட திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் அன்றைய நாளில் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தல்.
- மழை நின்றதையடுத்து நீர் வரத்து சரிந்ததால், புழல் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு முற்றிலும் நிறுத்தம்.
- தேனி பெரியகுளம் கும்பக்கரை அருவியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு குறைந்து, நீர்வரத்து சீரானதால், 18 நாட்களுக்குப் பின் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.
- நாமக்கல் குமாரபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில், மாணவ, மாணவிகள் 60 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு. பராமரிப்பின்றி இருந்த சமையல் அறைக்கு சீல் வைத்த உணவு பாதுகாப்புத் துறையினர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















