தூக்கமின்மை பிரச்சனையா? - நிபுணர்களின் பரிந்துரைகள் இதோ!
தூங்கி எழுந்ததும் புத்துணர்ச்சியாக உணர்வது மட்டுமே ஆரோக்கியமான தூக்கம் இல்லை. அதோடு, நினைவாற்றல், நோய் எதிர்ப்பு சக்தி, நல்ல மூட் என பல நன்மைகள் இருக்கிறது.
நிம்மதியான தூக்கத்திற்கு உடற்பயிற்சி மிகவும் அவசியம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
சீரான மூளை செயல்பாடு, உணர்ச்சிகளை கையாள்வது உள்ளிட்டவற்றிற்கு தூக்கம் மிகவும் அவசியம். 8 மணி நேரம் தூங்காமல் இருந்தால், வேலை செய்வது, சிந்திப்பது, உணர்ச்சிகளை கையாள்வது, வெளிப்படுத்துவது உள்ளிட்டவை சிக்கலாக இருக்கும்.
தினமும் ஒரே நேரத்தில் தூங்கி எழுவதை பழக்கமாக கொள்ளவும்.
தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு, மொபைல், டிவி பார்ப்பதை தவிர்க்கவும்.
ஆழ்ந்த உறக்கத்திற்கு வண்ணங்களைப் பயன்படுத்துவது பெரிதும் உதவும் என்கின்றனர் நிபுணர்கள். சாம்பல், மஞ்சள், இளஞ்சிவப்பு உள்ளிட்ட நிற பெயிண்ட்களை படுக்கையறைக்குப் பயன்படுத்தலாம்.
தூங்கு செல்வதற்கு இரண்டு மணி நேரம் முன்பு உணவு சாப்பிடுவது நல்லது. எளிதில் செரிமானம் ஆகாத உணவுகளை தவிர்க்கவும்.
தூங்குவதற்கு முன், ஹாட் ஷ்வர் அல்லது Cold ஷவர் அமைதியான தூக்கத்துக்கு வழிவகுக்கும்.
தினமும் சூரிய ஒளியில் சிறது நேரம் இருப்பதை வழக்கமாக்கவும்.