மேலும் அறிய
Advertisement
Tamilnadu RoundUp: த.வெ.க. மாநாட்டில் குவிந்த தொண்டர்கள்! நாளை முதல் தீபாவளி சிறப்பு பேருந்துகள்!
Tamilnadu Round Up: தமிழ்நாட்டில் இதுவரை காலை முதல் தற்போது வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
- தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு இன்று நடக்கிறது – காலை முதலே மாநாட்டுத் திடலில் குவியும் தொண்டர்கள்
- தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டை முன்னிட்டு தொண்டர்கள் குவிந்து வருவதால் தீவிர பாதுகாப்பு பணியில் போலீஸ்
- தமிழ்நாட்டில் வரும் நவம்பர் 1ம் தேதி வரை மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்
- மதுரையில் ஏற்கனவே பெய்த மழைநீர் இன்னும் வடியாத நிலையில் நேற்றும் மதுரையில் மழை பெய்ததால் மக்கள் கவலை அடைந்துள்ளனர் – மழைநீரை அகற்றும் பணியில் அதிகாரிகள், ஊழியர்கள்
- இலங்கை கடற்படையினரால் நாகை மீனவர்கள் 12 பேர் சிறைபிடிப்பு
- மேட்டூர் அணையின் நீர்மட்டம் 106.48 அடியாக உயர்வு – அணையின் நீர்மட்டம் தொடர்ந்து கண்காணிப்பு
- தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகள் என்னென்ன? விக்கிரவாண்டியில் இன்று அறிவிக்கிறார் விஜய்
- தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டிற்குச் செல்லும் 10 ஆயிரம் இலவச உணவுப் பொட்டலங்கள் வழங்கும் காஞ்சிபுரம் த.வெ.க. நிர்வாகிகள்
- த.வெ.க. மாநாட்டிற்காக சென்னையில் இருந்து இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் விபத்தில் சிக்கி உயிரிழப்பு
- கோத்தகிரி அருகே உலா வரும் கருஞ்சிறுத்தை உலா – சிசிடிவி காட்சியால் மக்கள் அச்சம்
- புதுச்சேரியில் ஆன்லைனில் பட்டாசு விநியோகம் எனக் கூறி மோசடி; 250 பேர் ஏமாந்த பரிதாபம்
- தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்
- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் – கிளாம்பாக்கத்தில் நேரில் ஆய்வு செய்த அமைச்சர் சிவசங்கர்
- சென்னையில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற ரயிலில் பயணித்த இளைஞர் த.வெ.க. மாநாட்டுத் திடலை பார்க்கவும் ஆர்வ மிகுதியில் கீழே குதித்ததில் உயிரிழப்பு
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
மதுரை
இந்தியா
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion