மேலும் அறிய
Tamilnadu Roundup:வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு.. மீண்டும் எகிறிய தங்க விலை - 10 மணி செய்திகள்
Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் இன்று காலை முதல் தற்போது வரை நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.

தலைப்புச் செய்திகள்
Source : special arrangement
- 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை, வரும் 4-ஆம் தேதி வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
- வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக இன்று வலுப்பெறுகிறது
- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து சவரன் 92000 ஆக உயர்ந்தது
- டெல்டா மாவட்டங்களில் 25,000 ஏக்கரில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம். ஒன்றிய அரசின் குழுக்கள் இன்று தமிழ்நாடு வருகை. நெல்லின் ஈரப்பதத்தை அதிகரிப்பது குறித்து ஆய்வு.
- கரூர் சம்பவம் - பாதிக்கப்பட்டவர்களை மாமல்லபுரத்தில் சந்திக்கும் விஜய்
கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினரை நாளை மறுநாள் மாமல்லபுரத்தில் சந்திக்க விஜய் திட்டம் - அதிமுக எம்.பி. தம்பிதுரை உடல் நலக்குறைவால் சென்னை ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனையில் அனுமதி
- காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 909 ஏரிகளில் 118 ஏரிகள் முழுக்கொள்ளளவை எட்டியுள்ளன
- கொடைக்கானலில் இருந்து கூக்கால் மலை கிராமத்திற்கு செல்லும் பிரதான சாலையில் சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம்
- ஈரோடு அருகே கான்கிரீட் விழுந்த ரயில்வே பாலத்தில் தற்காலிகமாக இரும்புத் தாங்கிகள் பொருத்தப்பட்டு ரயில்கள் இயக்கம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement






















