மேலும் அறிய
Tamilnadu Roundup: ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்க விலை! போப் பிரான்சிஸ் மறைவு சட்டப்பேரவையில் இரங்கல்
Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே விரிவாக காணலாம்.

தலைப்புச்செய்திகள்
Source : ABP Live
போப் பிரான்சிஸ் மறைவை ஒட்டி, இன்றும் நாளையும் துக்கம் அனுசரிக்கப்படும் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
நீலகிரியில் இன்று முதல் 5 இடங்களில் மட்டுமே இ-பாஸ் சோதனை செய்யப்படும்
பைக் மீது லோடு ஆட்டோ உரசியதால் ஏற்பட்ட தகராறில் 5 பேருக்கு அரிவாள் வெட்டு.
திருவண்ணாமலை : சித்ரா பௌர்ணமி கிரிவலத்திற்காக 20 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும்.
மேட்டுப்பாளையம் அருகே உணவுக்காகக் குடியிருப்பு பகுதியில் நுழைந்த பாகுபலி யானை, மாமரத்தை உலுக்கி கீழே விழுந்த மாங்காய்களைச் சாப்பிட்ட நிலையில் மக்கள் பீதி.
பங்காளி சண்டைகளை எல்லாம் தாண்டி.., திமுகவை வீழ்த்த வேண்டும்! - டிடிவி தினகரன்
சென்னையில் மின்சாரம் பாய்ந்து உயிருக்குப் போராடிய சிறுவனை மீட்ட இளைஞருக்கு எடப்பாடி பழனிசாமி பாராட்டு
மகாராஷ்டிரத்தில் ஹிந்தி கட்டாயமில்லை; ஆனால் பிற மாநிலங்களில்..? மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் கேள்வி
பிறந்து 5 நாட்களே ஆன குழந்தையை ரூ.1.50 லட்சத்திற்கு விற்பனை செய்த சித்த மருத்துவர் கைது.
மறைந்த கத்தோலிக்க பேரவை தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிப்பு
போப் பிரான்சிஸ் மறைவை ஒட்டி, மூன்று நாட்களிக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு.
ஐபிஎல்லில் குஜராத் அணிக்காக விளையாடி வரும் சாய் சுதர்சனின் ஆட்டத்தை பாராட்டிய நடிகர் சிவகார்த்திகேயன்!
தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் சவரனுக்கு 2200 உயர்ந்தது, ஒரு சவரன் 74,320-க்கும், ஒரு கிராம் 9290 ரூ-க்கு விற்பனை
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்






















